பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


சிறந்த அழகையும் காதலையும் உடைய தொன்முறை மனைவியருடனே அவன் பொருந்தி நம் வருத்தத்தை நோக்கும் குணம் இல்லாதவனாக ஆயினான். இதனை நன்றாய் நான் அறிவேன். அறிந்திருப்பினும் அவன் வந்து என்னைப் பேணிச் சிறிது அன்பு காட்ட அவ்வளவில் நாணம் இல்லாத மனம் என் வயமின்றி அவனிடத்தில் நெகிழ்ந்து செல்வதையும் காண்கிறேன்.

இருளுடன் மாறுபடும் கரிய கூந்தலையுடைய தொன் முறை மனைவியருடன் அவன் பொருந்தி நமது வருத்தத்தை அறிந்து தெளியும் பண்பு இல்லாதவன் ஆயினான். இதை நான் அறிவேன். அறிந்திருப்பினும் ஒருகால் அவன் அன்புடன் சிறிது அருள்வானாயின் என் மயக்கமுடைய நெஞ்சம் அதற்கு மகிழும். அதையும் காண்கிறேன்.

ஒளியுடைய அணியையும் காதலையும் உடைய நெஞ்சம் வருத்தம் நீங்குதலும் காண்கிறேன்.

அதனால், காம நோயால் மிக்க வருந்தும் நெஞ்சம் நள்ளிரவில் நான் கொள்ளும் உறக்கத்தை வாங்கிக் கொண்டு அவரிடம் சென்று விட்டதாயின், இனி நாம் இருந்து உயிர் வாழ்வதோ மற்றவர் சிரித்தற்கு உரியது என்று தலைவி தோழி தலைவனிடம் வரைவு கடாவுதற்குச் சொன்னாள்.

314. இருங்கழி ஒதம் போல் தடுமாறினேன்! கருங் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசைதொறும் சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இருந் தும்பி இயைபு ஊத, ஒருங்குடன் இம்மென இமிர்தலின், பாடலோடு அரும்பொருள் மரபின் மால்யாழ் கேளாக் கிடந்தான்்போல் பெருங்கடல் துயில் கொள்ளும் வண்டுஇமிர் நறுங் கானல் காணாமை இருள் பரப்பி, கையற்ற கங்குலான், மாணாநோய் செய்தான்்கண் சென்றாய்; மற்று அவனை நீ காணவும் பெற்றாயோ? காணாவோ? மட நெஞ்சே! கொல் ஏற்றுச் சுறவினம் கடி கொண்ட மருள் மாலை அல்லல்நோய் செய்தான்்கண் சென்றாய்; மற்று அவனை நீ புல்லவும் பெற்றாயோ? புல்லாயோ? மட நெஞ்சே!