பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

227


வெறி கொண்ட புள்ளினம் வதி சேரும் பொழுதினான் செறிவளை நெகிழ்த்தான்்கண் சென்றாய்,மற்று அவனை நீ அறியவும் பெற்றாயோ? அறியாயோ? மட நெஞ்சே! என ஆங்கு - எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ் அரும் படர் அவல நோய் செய்தான்்கண் பெறல் நசைஇ, இருங் கழி ஒதம் போல் தடுமாறி, வருந்தினை-அளிய என் மடம் கெழு நெஞ்சே!

- - கலி 123 கரிய கொம்புடைய புன்னைமரத்தின் சிறிய கிளையில், மலர்தோறும் மலர்கின்ற நேரத்தைப் பார்த்து, நுகர்வதற்குச் சுரும்புக் கூட்டம் ஆரவாரிக்கும் ஒசையுடன், கரிய தும்பி களும் ஒன்று கூடி ஊத, உண்டான குரலும் சேர, இம்ம்' என்ற ஒசைபட ஒலித்ததால் அவற்றைக் கேட்டு யாவரா லும் பெறுவதற்கு அரிய திருமால், பாட்டுடனே யாழையும் கேட்டுப் பள்ளி கொண்டவனைப் போல், பெரிய கடலும் ஒலியடங்கி உறக்கம் கொள்ளும் வண்டு ஒலிக்கின்ற கானலில்

அறியாமை உடைய நெஞ்சே! கானலில் பொருள்களைக் கண்கள் காணாதவண்ணம் அருளைத் தான்் பரப்பி உயிர்கள் எல்லாம் செயல் அறுவதற்குக் காரணமான இரவில் ஒரு மருந்தினாலும் போக்கப்படாத காம நோயை உண்டாக்கிய வனிடத்தில் சென்றாய்! சென்ற நீ, பின், அவனைக் கண்ணால் காணல் என்ற அளவு தான்் பெற்றாயோ, அவனைக் காணா திருந்தாயோ? சொல் என்றாள்

பேதை நெஞ்சமே கடற்கரைச் சோலையில் கொல்லும் ஏறான சுறா மீன் கூட்டம், செல்பவரைச் செல்லாது தடுக்கும் மயக்கத்தை உடைய மாலைக் காலத்தே வருத்தத்தைச் செய்யும் காம நோயை உண்டாக்கியவனிடம் போனாய் அங்ங்னம் போன நீ அவனைத் தழுவ என்னும் அளவுதான்் பெற்றாயோ, தழுவாமல் இருந்தாயோ? சொல் என்றாள்

“அறியாத நெஞ்சே! அக் கடற்கரைக் சோலையில் ஒழுங்கு கொண்ட பறவைக் கூட்டம் தாம் தங்கும் இடத்தில் போய்ச் சேர்கின்ற மாலைக் காலம் இக் காலத்தில் முன்பு