பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

231


இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப் பிறை ஏர் சுடர் நுதற் பசலை மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே. - கலி 125 அறியாதவர்கள் தம் மனம் இது செய்யக் கூடாது என்று கைவிடாது, வேறு விலக்குபவரும் இல்லாமல் உலகத்தில் பார்ப்பவர் இல்லை என எண்ணிச் தீவினைகள் செய்வர். அவற்றை அவர் பிறர் அறியாமல் மறைப்பர், அவ்வாறு செய்யினும் தாம் செய்ததை அறிந்துள்ளவர் அவர்தம் மனமே அல்லாது வேறு நெருங்கிய சான்றில்லை. ஆகையால், வள முடைய ஒட்டத்தில் பயிற்சியுடைய வலிய குதிரையை உடையவனே! உன்னை நான் இடித்துக் கூற வேண்டிய தில்லை. என்றாலும் உன்னுடன் யான் கொண்ட நன்மை யற்ற ஆராய்ச்சியால் நீ அன்புடையவனாய் இல்லை என்று என்னிடம் வந்து சொல்வேன்; ஐயனே கேட்பாய்.

மகிழ்வை உண்டாக்குகின்ற இனிமையுடைய மொழியை உடையவளின் தொய்யிற் கோலம் எழுதின இளைய முலை தோன்றிடாத இளமைப் பருவத்தில் நீ கொண்ட தொடர்பை, அவளிடம் கொண்டாய். நின் பிரிவைப் பொறுக்க இயலாது அவள் கண்ணிர் சிந்தவும் அதைக் கண்டும் அருளாமல் கைவிடுபவனே! ஒலிக்கும் அலையையுடைய நெய்தல் நிலத் தலைவனே! நீமிகவும் கொடியவன்.

ஒலி இசைக்கும் வளையலை உடையவளின் அழகிய தழையை எடுத்து விளங்கும் இளமைப் பருவத்தில் எழுச்சி யுடைய நலம் மேலும் மேலும் வளருமாறு நீ கொண்ட தொடர்ச்சியை, அவளது மேனி வாட, நின்னை வெறுத்து அழவும் அதைக் கண்டும் பொருந்தாமல் கைவிடுபவனே! விளங்கும் நீரையுடைய துறைவனே! நீ மிகவும் கொடியவன்.

இனிய மணியை உடைய சிலம்பணிந்தவள், இன் மொழி உடையவள். அவளது மயிரைப் பின்னி முடிக்கும் இளமைப் பருவத்தில் வந்த பொருந்தியது நின் உறவு. அது தொடர் கிறது அங்ங்னமாகவும், அவளது அல்குலில் உண்டான நுட்பமான வரி வாடும்படி அவளிடம் வாராமல் அவளைக் கைவிடுபனே! குளிர்ந்த நீர்த் துறையை உடையவனே! இனி நீ தகுதியுடையவன் ஆகாய்!