பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பெருமை உடையவனே நட்புடன் கூறிய அத் தன்மையை உடையவள் என எண்ணிப் பார்த்து அருள்வாய். அருளி மணந்து அவள் தோளை மணந்தாய் என்றால் உன்னை அல்லாமல், முன் கையில் நில்லாது கழன்ற வளையையுடைய இவளுக்கு இனிப் பிறைத் திங்களைப் போன்ற நெற்றியில் தோன்றிய பசலை ஒருகாலமும் தோன்றாமல் மறையுமாறு போய் விடும் என்று தோழி தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ளுமாறு தூண்டினாள்.

317. குதிரை பூண்க நின் தேர் பொன் மலை சுடர் சேர, புலம்பிய இடன் நோக்கி, தன் மலைந்து உலகு ஏத்த, தகை மதி ஏர்தர செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார்போல், எக்கர் மேல் இறை கொள்ளும், இலங்குநீர்த் தண் சேர்ப்ப! அணிச்சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர் மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானற் புள் என உணர்ந்து, பின் புலம்பு கொண்டு, இனையுமே. நீர் நீவிக் களுன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில் தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழிப் பூத்த மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு, இனையுமே.

நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக்கால், தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன், மதித்தாங்கே, நனவு எனப் புல்லுங்கால் காணாளாய், கண்டது கனவு என உணர்ந்து, பின் கையற்று, கலங்கமே. என ஆங்கு

பல நினைந்து, இணையும் பைதல் நெஞ்சின், அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி மதி மருள் வாள் முகம் விளங்க, புது நலம் ஏர்தர, பூண்க, நின் தேரே! - கலி 126