பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


318. காதலியை மணப்பாய் தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும், புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும் வரி Dமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊதசெரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல் வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப கொடுங் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர், நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோகடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க, இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை? குறிஇன்றிப் பல்நாள்,நின் கடும்திண் தேர் வரு பதம் கண்டு எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோஅறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிதாக செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை? காண் வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோவேய்நலம் இழந்ததோள் விளங்குஇழை பொறை ஆற்றாள் வாள் நுதல் பசப்பு ஊர, இவளை நீ துறந்ததை? அதனால் இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர, 'உரவுக் கதிர் தெறும் என ஒங்கு திரை விரைபு, தன் கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு உரவு நீர்ச் சேர்ப்ப - அருளினை அளிமே.

- கலி 127 போரில் சிறந்து விளங்கும் ஆழிப்படையை உடைய திருமாலின் தோளில் சேர்ந்த மாலைபோல் பெரிய கடற் கரையில், அறலையுடைய மணலில், விளங்கும் கொத்தை யுடைய ஞாழற்பூவும், புன்னைப் பூவும், கட்டவிழ்ந்த தாழம் பூவும், மொட்டவிழ்ந்த மலர்களை உடைய செருந்திப் பூவும், வரிகளையுடைய மிஞ்று சிறிதே ஒலித்து மிகவும் ஆரவாரம் செய்யக், கருநிறத் தும்பிகள் தமக்குள் ஒன்று கூடித் தேனை அருந்தச் சூழ்ந்து கிடக்கும் நீர்த்துறையை உடையவனே!.