பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

243


பட்டது; தாழை விழுதால் ஆன கயிற்றில் தொங்குமாறு அமைக்கப்பட்டது)

அதைக் கேட்டு ஊசலிடம் சென்ற தலைவியை நோக்கி, “இளைய மான் பிணையின் பார்வையை வென்றவளே, உன் தடமென் தோளைக் கைவிட்டவனின் கொடுமைத் தன்மை களைக் கூறிப் பாடி நீ ஏறிய ஊசலை யான் உயரச் செலுத்தித் தாழ்த்து ஆட்ட நீண்ட நேரம் ஆடுவாயாக." என்றாள் தோழி.

தலைவி தோழி சொன்னபடி பாடவில்லை. ஆதலால் தோழி’ தலைவியே, கானவில் மணம் கமழும் ஞாழற்பூவின் நிறம் போன்ற உன் மேனி பசலை கொள்ளும்படி செய்த வனது துறையில் ஒளியையுடைய நிலவைப் போன்ற ஒளி யுடைய மணலின் மேலே ஒடுகின்ற ஒழியாத செலவை யுடைய நண்டுகள் இப்போது நம்மைக் கண்டு தம் வளைகளில் புகுகின்றன. அவ்வாறு புகுவதால் அத் துறைவன் நம்மிடம் செய்த கொடுமையை எண்ணி நம் முன் நிற்பதற்கு வெட்கம் கொண்டனவோ? தோழி, எங்ங்னம் நாணங் கொண்டன. எனின் இரவுக் காலம் எல்லாம் நாணிக் கிடந்தன வாய் இருக்கும் எனத் தலைவனின் இயல்பைப் பழித்தாள்.

அதைக் கேட்டபோதும் தவைவி பாடாதிருந்தாள். ஆதலால், தோழி மேலும், "முகிலும் விரும்பும் கூந்தலையும் மதர்த்த நோக்கினது அழகையுடைய கண்ணையும் கடலில் பிறந்த முத்தின் அழகை ஒத்த முறுவலையும் கொண்டவளே! மடியாத நோயைச் செய்தவனின் கொடுமையின் கூற்றைச் சொல்லி நாம் பாடும் மிகவும் உயர்ந்த ஊசற் பாட்டு ஒன்றை நீ பாடுவாய்' என்றாள்.

அதைக் கேட்டாள் தலைவி. அதன் பின்பும் அவள் பாடவில்ல்ை. அதனால், தோழி நம் மீது அன்பு கொண்டு புணர்ந்த அன்று தான்் எழுதிய கரும்புக் கோலத்தின் அழகு கெடுமாறு மென்மையான தோளை மெலிவித்தவனின் துறையில், துணையுடன் கூடிய அன்றில் பறவைகள், தன் துணையானவனை நீங்கியவள் வருந்தினாளோ என எண்ணி இரவுக் காலத்திலும் அழைக்கவில்லை. ஆதலால் தோழி அப் பறவைகள் நம் வருத்தத்தைப் பார்த்துத் தாமும் வருத்தம்