பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

245


இரைதேர்ந்து உண்டு, அசாவிடுஉம் புள்ளினம் இறை கொள முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப, நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல் சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்புஎய்தி, வினை வாய்த்து, துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால் 'நன்னுதால் அஞ்சல் ஒம்பு என்றதன் பயன் அன்றோபாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள் மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை? பல் மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால் 'சின்மொழி தெளி எனத் தேற்றிய சிறப்பு அன்றோவாடுபு வனப்பு ஒடி வயக்கு உறா மணி போன்றாள் நீடு இறை நெடு மென் தோள் நிரைவளை நெகிழ்ந்ததை? அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ, மணந்தக்கால் கொடுங்குழாய் தெளிஎனக் கொண்டதன் கொளை அன்றோ பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள் மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை? என ஆங்கு - வழிபட்ட தெய்வம்தான்் வலி எனச் சார்ந்தார்கண் கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல் பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே. - கலி 132 மூன்று முரசைக் கொண்டு ஆட்சி செய்யும் பாண்டியன் தம்முடன் மாறுபட்டவரின் மாறுபாடு கெடுமாறு வரிசைப் பட நிறுத்திய களிறுகள், மற்றப் படைக்கு நடுவே நிற்கும் படி கம்பத்தில் கட்டப்பட்ட இருக்கை போன்று, பல வகை யான வடிவுடைய இரையைத் தேடித் தின்று இளைப்பாறும் பறவைகள், தாம் விரும்பிய பெண் பறவைகள் தமக்குத் துணையாக, வன்மையுடைய கடலின் அலை மோதும்படி உயர்ந்த மணல் மேட்டின் தங்க, தாம் போன இடத்துத் தமக்குக் கேடு ஏதும் இல்லாது மேற்கொண்ட செயல் இனிது முடியப் பெற்று வந்த தலைமை பெற்றுத் துறையில் மரக்