பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


இங்ங்னம் ஏறி வந்து மணந்தால் இவள் நலம் உழைப்பாளி இடத்துப் பெரும் பொருளைவிட அதிகமாகப் பெருகுவ தாகுக' எனத் தோழி தலைவனிடம் வரைவு கடாயினாள்

328. இனிய உயிரைப் போக்கும்

அரிதே, தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல்; பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே; பலவே யாமம் பையுளும் உடைய, . சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்; அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து, எழில்.துஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின் அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே.

மெல்லிய நெஞ்சு பையுள் கூர, தம் சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை வில்லினாள் எய்த்லோ இலர்மன்; ஆயிழை வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய். நகை முதலாக, நட்பினள் எழுந்த தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை வகைமையின் எழுந்த தொல் முரண் முதலாக, பகைமையின் நலிதலோ இலர்மன், ஆயிழை பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய்.

'நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்து, தம் சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப் பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடுஞ் சுடர்த் தீயினால் கடுதலோ இலர்மன், ஆயிழை தீயினும் கடிது, அவர் சாயலின் கனலும் நோய். ஆங்கு

அன்னர் காதலராக, அவர் நமக்கு இன் உயிர் பேர்த்தரும் மருத்துவர் ஆயின், யாங்கு ஆவதுகொல்? - தோழி! - எனையது உம் தாங்குதல் வலித்தன்று ஆயின் நீங்களிது உற்ற அன்று, அவர் உறீஇய நோயே. - கலி 137