பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தோழியே! அத் தன்மையுடைய நெஞ்சினர் நம்மிடம் காதல் கொண்டவராய் எண்ணி, முன்பு நம்மை நீங்குதற்கு அரிய இயற்கைப் புணர்ச்சியினின்று அவர் நம்மை வருத்திய நோயைத் தான்் பொறுத்தலைத் துணிந்த துணிவை ஆராய்ந்து பார்த்தால், எப்படியும் நம் இனிய உயிரைப் போக்கும் அவர் நமக்கு உயிர் நீங்காமல் மீட்கும் மருத்துவராய் இருந்தால், அந்நிலை எப்போது அவர்க்கு உண்டாவது? என்று வன்புறை எதிரழிந்து சொன்னாள்.

329. மடலூர இன்பம் வாய்த்தது எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்தாங்கு அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு, வறிதாகப் பிறர் என்னை நகுபவும், நகுபு உடன், மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டிஎன் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வெளவி, தன்நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன்கொலோ? மணிப் பீலி சூட்டிய நூலொடு, மற்றை அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து, யாத்து, மல்லல் ஊர் மறுகின்கண் இவட் பாடும், இஃது ஒத்தன்எல்லீரும் கேட்டிமின் என்று. படரும், பனை ஈன்று மாவும் சுடர் இழை, நல்கியாள், நல்கியவை

பொறை என் வரைத்து அன்றி, பூநுதல் ஈத்த நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற உப்பு இயல் பாவை உறை உற்றது போல, உக்குவிடும் என் உயிர்.

பூளை, பொல மலர் ஆவிரை - வேய் வென்ற தோளாள் எமக்கு ஈத்த பூ உரிது என் வரைத்து அன்றி, ஒள்ளிழை தந்த பரிசு அழி பைதல் நோய் முழ்கி, எரி பரந்த நெய்யுள் மெழுகின் நிலையாது, பை பயத் தேயும் அளித்து என் உயிர்.