பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


செய்யும் கானலைச் சேர்ந்த கடல்நிலத் தலைவன், அப் பரத்தையை மணப்பன் எனப் பலரும் கூறுகின்றனர். ஆதலால் அவன் அறம் உடையவன். அஃது அவனுக்கு அருளும் ஆகும்” என்று இகழ்ந்து தோழியிடம் சொன்னாள்.

51. நம் நட்பு நாடுமோ? வெள்ளங்குருகின் பிள்ளை செத்தெனக், கானிய சென்ற மடநடை நாரை உளர, ஒழிந்த தூவி குவவு மணற் போர்வில் பெறுஉம் துறைவன் கேண்மை நல்னெடுங்கூந்தல் நாடுமோ-மற்றே? - ஐங் 153 தோழி, "வெள்ளாஞ்குருகின் குஞ்சினைத் தன் குஞ்சு என்று எண்ணி அதைக் காண்பதற்குச் சென்ற மடப்பம் பொருந்திய நடைகொண்ட நாரை அலைப்ப வீழ்ந்த அதன் தூவி, காற்றில் திரண்டு உயர்ந்த மணற்குவியலில் பெறப்படும் துறைவனின் நேயம், நல்லவாய் நீண்ட கூந்தலை யுடைய தலைவியை நாடுமோ? நாடாது. ஆதலால் நீங்கள் தூதாக இணங்க வேண்டுவது ஏன்?" என்று தூதாக வந்த வரிடம் வினவினாள்

52. பொய்க்கும் இவ் ஊர்!

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்,

காணிய சென்ற மட நடை நாரை

கானற் சேக்கும் துறைவனோடு

யான் எவன் செய்கோ? பொய்க்கும் இவ் ஊரே? - ஐங் 154

தலைவி, "வெள்ளாங்குருகின் குஞ்சைத் தனது என்று எண்ணிக் காண்பதற்குச் சென்ற மடநடை நாரை ‘கடற்கரைச்' சோலையில் தங்கும் துறைவனுடன் யான் என்ன செய்வேன்’ இவ் ஊரார் பொய் கூறுகின்றனரே!” என்று வருந்திக் கூறினாள்.

53. பைஞ்சாய்ப் பாவையைப் பெற்றேன்

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக், காணிய சென்ற மட நடை நாரை