பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

279


நீருள் புகினும், கடும். ஒஒ கடலே எற்றமிலாட்டிஎன்ஏமுற்றாள்? என்று.இந் நோய் உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான்் மார்பு ஆங்குகடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர, கெடல் அருங் காதலர் துணைதர, பிணி நீங்கி, அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத் திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் நல் அவையுள் படக் கெட்டாங்கு, இல்லாகின்று அவர் ஆய் நுதல் பசப்பே. - கலி 144 நல்ல நெற்றியை உடையவளே! இவள் ஒருத்தி நாணத்தைக் கைவிட்டுத் தன் மனத்தில் ஒன்றை எண்ணிப் பெருமூச்சு விட்டு விழும் கண்ணிரைத் துடைப்பாள் பிறரை நோக்காமல் நிலத்தைக் கவிழ்ந்து நோக்குவாள்; "நீ உற்றது எது? வெனக் கேட்பவர்க்குக் கனவில் வாய் அஞ்சிக் கூறுப வரைப் போல் விடையல்லாத சிலவற்றைச் சொல்லிப் பல முறையும் நகைப்பாள். இவ்வாறு தெளிவும் மயக்கமுமாய் மயங்குவாள். பிற அத் தன்மையவான துன்பங்கள் பலவற்றை யும் தன்னிடத்தே ஏற்பட 'இவள் என்ன துன்பத்தை அடைந் தாளோ? இவளைக் காண்பாய்! நாம் போய் இவள் சொல்லும் சொற்களைக் கேட்டலைச் செய்யாமோ என்றார்’ என்று சொன்னாள்

அங்ங்னம் சொன்னவள், கேட்டோம் என்று உமக் குள்ளே கூறிவந்து, “ஏன்அடி நீ என்ன வருத்தம் அடைந்தாய்! உனக்கு இந்த வருத்தத்தைச் செய்தவர் யார்? உன் வருத்தத்தை எங்களுக்குக் கூறுக என்று வினவுகின்றவர்களே, எனக்குத் துன்பம் நேர்ந்த விதத்தைக் கேட்பீராக கொத்தான் கூந்தலைக் கொண்டவளே! எனக்கு உண்டான வருத்தத்தை நான் உனக்குச் சொல்லும் அளவும் என் உயிர் போகாமல் தங்கிற்று என்று, இங்ங்னம் என, இவ்வாறு தன்னுடன் மருவுதலைச் செய்து அம் மருவுதலை அவன் கைவிட்டுப் போனான் அக் காலம் தொடங்கி என் நெஞ்சு எனக்கு