பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


கண்ணிரால் சிறந்த கடலில் முகந்து பரவி ஒலித்து முன்பு என்னிடம் தாழ்ந்து பின்பு என்னைத் துறந்து தொடியை நெகிழச் செய்தவன் போன காட்டில் நெருப்பு மிக்குச் சுடராம் செறிந்த துளியை வீச மாட்டாயோ? வீசுவாய்!” என்று மழையைப் பார்த்துச் சொன்னாள்

அங்ங்னம் சொன்னவள், மீண்டும் அந்த ஊரில் உள்ள வர்களைப் பார்த்து, “ஊரவரே இக் கடும்பகல் எமக்கு எம் உறக்கத்தைத்தான்் கொண்டு எம்மை நினையாத காதலை உடையவன் என்னிடத்துச் செய்த குணங்கள் தருவதால் வந்த என் இடையறாத நோயினால் வருகின்ற குளிரை வேது கொண்டு என்னைக் காக்கும் கடும்பகலே, ஞாயிறே. நீ எல்லாக் கதிர்களையும் பரப்பி இப் பகற்பொழுதுடன் போகாது நிற்றலை விரும்புகிறேன் நீ சென்றால் பொலிவற்ற மயக்கத்தை உடைய மாலைப்போது இன்று வந்து என்னைக் கொல்லாது போவது அரியதாகும் அதனுடன் என் உயிர் போகாமல் இராது, என்றாள்

எனச் சொல்லி மேலும் அவள்,"ஞாயிறே, நீ எம் காதலரை விரையக் கொண்டு கடல்மீது தோன்றிக் காலையில் இந்த உலகத்துக்கு வருவாயாயின், நான் என் நோயின் நடுக்கத்துடன் உன்னிடத்து அவன் இனியன்; அவனை நீ தனித்திராதே கொள் என் நெஞ்சைப் பாதுகாப்பதும் செய்வேன். அங்ங்னம் பாதுகாத்துப் பின்பு அவனைக் காண்பேனோ?” என்று வினவினாள்.

அங்ங்னம் ஞாயிற்றை நோக்கிச் வினவின அளவிலே மாலைக்காலமும் திங்களும் வந்தன. அவற்றால் வருத்தம் மிக்கு என் வருத்தம் கொண்ட நெஞ்சு முன்னம் வளை கழலும்படி என்னைக் கைவிட்டுப் பின்பு வருந்திய கள்வனை எண்ணி என்னிடமிருந்து ஒளித்துப் போய் அவனிடம் பொருந்தியது அதுதான்் மீண்டும் வந்து பெரியகடல் தன் நிறம் தோன்றாது பொலிவுறக் கானல் பறவைகள் முதலியவை இல்லாமல் தனித்திருக்க, கழியில் உள்ள நெய்தல் மலர் இதழ் குவிந்து தோன்ற வந்த மாலை, பின்பு விளங்கும் வெண்ணிலவு பரவும் பொழுதில் வானத்தையும் திசைகளையும் அவனைத் தேடித் துழவும் இவ்வாறு எனக்குத் துன்பம் செய்தவன், தான்்