பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


நல் எழில் மார்பன் முயங்கலின் அல்லல் தீர்ந்தன்று, ஆயிழை பண்பே. - கலி 146 மன்னன் தனக்குப் புகழ் உயர்வதற்காக, அறிவால் மிக்க தம் அமைச்சரை முதலில் நடுங்கத் தக்க சொற்களைச் சொல்லிப் பின்பு ஒரு நிலையில் எல்லையற்ற துன்பங்களை அடையும்படி கொல்வதை இயல்பாய்க் கொண்ட கொடுங் கோல் மன்னனை விட, கணவர்க்கு மகளிர்க்கு உண்டான காமத்தாலும் அவர்மீது உண்டாகும் அன்பு இல்லாமல் இருந்தது எவ்வாறு என்றால் அவள் தன் தலைவன் அன்னப் பறவையின் தூவியால் செய்த மென்மையான படுக்கையில் அருளி இரவில் வந்து கூர்மையான எயிற்றின் நீரைப் பருகிக் குற்றம் நீங்க அன்பு காட்டி நீங்கினன் ஆதலால் அத்தகைய அன்பால் நிறையாமல் நீங்கிய அணிகளை உடையவளாய்த் தன் நாணையும் நிறை என்ற குணத்தையும் தாங்க வேண்டும் என்று அறியாமல் தன் தோள் மெலிந்து பெரிய மையுண்ட கண் நீர் நிறைகையால் அந்த நீர் தன் குவிந்த முலை மேல் வடிய, அவனைத் தேடுதற் பொருட்டு மனம் சுழல்வாள். எனவே இனி நாம் இவளிடம் போய் இவள் கூறுவனவற்றைக் கேளாது இருப்போமா? கேட்போம் என்று உமக்குள் சொல்லி என்னிடத்தில் வந்து ஒளியுடைய அணியை உடையவளே,’ என்று விளித்துப் பிரியேன் எனக் கூறி விட்டுப் பிரிய எண்ணியவனைப் பிரியமாட்டான் என்று எண்ணி அவன் பிரிதலால் நாணத்தையும் துறந்தாள் எனச் சொல்லி, எனக்கு அன்புடையவர் போல், நீ என்ன துன்பம் அடைந்தாய்? என வினவுகின்றவர்களே, என் வருத்தத்தை எல்லீரும் கேளுங்கள்:

“எனக்குச் சிறந்தவன் என் வலி நீங்கும்படி என்னைக் கைவிட்டமையால் பெருகி வந்து என் மீது வந்துள்ள இக் காம நோய், கோடைக் காலத்தில் உலகத்தைச் சுடும்படி பொய்யா மல் போன முகில் வருத்துவதைப் போலும் பெருகி, என் உயிரைப் போக்கும் நீர் வெள்ளம் வருத்துமாற்றையும் போலும்” என உரைத்தாள்

அவ்வாறு சொல்லி, அவன் அன்பு இல்லாதவன் ஆவதை அறியாமல் அவனைப் புணர்ந்து தன் அழகையும் நாணத்தையும் உள்ளத்தையும் இவள் இழந்தாள் என்னும்