பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

297


அதனால் ஞாயிற்றைப் பார்த்து, “ஞாயிறே, போக்கு வதற்கு அரிய இருளைப் போக்கும் வானத்தில் திங்கள் தோன்றுவதைப் போல் நீயும் நீருக்குள்ளே தோன்றுவாய். அவ்வாறு தோன்றிய இடத்து அந் நீரில் வாழும் தேரை இரை என உன்னை உண்டுவிடும் ஆதலால் அதனின்று உன்னைப் பாதுகாத்துக் கொள்” என அதற்கு முகமன் கூறினாள்

"வானத்திலிருந்து எங்கும் பார்க்கின்ற நீ எனக்கு என்ன செயலைச் செய்வாய்? ஒன்றையும் செய்யாயினும் இப்போது என் கேள்வன் எங்கு இருந்தாலும் எனக்குக் கொண்டு வந்து காட்டுவாய். அங்ங்ணம் நீகாட்டாது போயின் நான் உன் கதிர்களைப் பிடித்துக் கொண்டு அந்த வானத்திலே ஏறிப் பார்ப்பேன். அதற்கு நீ செய்யும் காரியம் 'எனக்கு அருள் செய்யாதவனை நாடி தான்் பிடித்துக் கொள்ளும்வரை ஞாயிறே, உன் பல கதிர்கள் பகற்காலத்துடன் இங்கு நிற்கச் சில கதிர்களுடன் மறைவாயாக!” எனச் சொன்னாள்.

“உலகத்தவர் வேண்டிக் கொண்ட செயல்களை மறுக்காத ஞாயிறே! என் கையிலிருந்து நீங்காமல் அழகிய மயிரை யுடைய முன் கையில் கிடந்து சுழலும் வளையிடத்தைப் பற்றித் தெளிவித்து என்னைக் கூடினான் அத் தகையவன் பாலின் பயனைப் பெறுவதற்குச் சிலவற்றைக் காட்டிக் கறக்கப்படாத காட்டெருமைகள் உள்ள காட்டைக் கடந்து போனானோ? என்னிடம் அன்புகொள்ளாத செயலைச் செய்து இந்த ஊரிலேயே இருந்தான்ோ? இரண்டையும் நான் அறியேன்! அவனை முயங்கப் பெறாது வருந்துகின் றேன். அதனுடன் உன்னால் மாலைக் காலமும் வந்தது இனி இந்த நோய் என்னிடமிருந்து நீங்காது அவன் இங்கு இருப்பா னானால் எனக்குக் காட்டு. காட்டினால் அவனைச் சினவா மல் மனத்தால் ஏற்றுக்கொள்வேன்.” என்ற உரைத்தாள்.

ஞாயிறு அவனைக் காட்டாமல் மறைந்தது ஆதலால் அதனைக் கை விட்டு, “நடுவு நிலைமையாய் இருத்தலின்று ஒருபால் பொருந்தாத கூற்றமே! சுறவுக் கொடியை உடை காமன் செய்கின்ற கொடுமைகளையும் நீயும் நின் ஒலையில் எழுதி வைத்துக் கொண்டு தண்டிப்பாய் அவன் நமக்கு