பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


தொடங்கி மாலை முற்றும் அங்கேயே தங்கும் தெளிந்த கடல்நிலத் தலைவனுடன் வாராமல் என் அன்புடைய மைந்தன் தான்் தனித்து வந்தான்்” என்று தலைவி வருந்தி சொன்னாள்.

56. தோழியின் துயரைத் தீர்! வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக், காணிய சென்ற மட நடை நாரை கானல் அலம் பெருந் துறைத் துணையொடு கொட்கும் தண்ணம் துறைவ! கண்டிகும் அம் மா மேனி எம் தோழியது துயரே. - ஜங் 158 “கடல் வெண்நாரையின் குஞ்சைத் தன் குஞ்சு என எண்ணி அதைக் காண்பதற்குச் சென்ற மடநடை நாரை, அஃது பொய் எனக் கண்டு, கானலின் பெரிய துறையில் தன் பெட்டையுடன் திரியும் குளிர்ந்த துறைவனே! அழகான மாந்தளிர் போன்ற மேனியை யுடைய எங்கள் தோழியான பரத்தையரின் துயரைக் கண்டு அதைப் போக்கி வருக எம்மைவிட அவள் ஆற்றாமை மிகவுடையவள். ஆனாள்” எனத் தோழி தலைவனுக்கு உரைத்தாள்.

57. இவளது நலத்தைத் திரும்பத் தருக

வெள்ளங்குருகின் பிள்ளை செத்தெனக்,

காணிய சென்ற மட நடை நாரை

பசி தின அல்கும் பணி நீர்ப் சேர்ப்ப

நின்னொன்று இரக்குவென் அல்லேன்;

தந்தனை சென்மோ - கொண்ட இவள் நலனே.

- ஜங் 159

“வெள்ளாங்குருகின் பார்ப்பைத் தன் பார்ப்பு என எண்ணி அதைக் காண்பதற்காகச் சென்ற மடநடை நாரை, பசி வருத்த வருந்தியிருக்கின்ற குளிர்ந்த நீரையுடைய நெய்தல் நிலத் தலைவனே! நினக்கே உரிய ஒன்றனை நான் இரக்க வில்லை! நீ கவர்ந்து கொண்டாயே இவள் நலம் அதைத் தந்து விட்டுப் போவாயாக!” என்று தோழி தலைவனைப் பார்த்துக் கூறினாள்