பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

299


கண்கள் உறங்கவில்லையாயின், கதிரவனே, எல்லாப் பொரு ளையும் காட்டுகின்ற நீ நனவில் வந்தேனும் அவனைக் காட்டாயானால் இப்படியே வருத்தம் அடைந்து பனை ஈன்ற குதிரை மீது ஏறி அவன் என்னிடம் தான்ே வரும் படியாக, அந்தக் காமன் காலைக்கட்டிக் கொண்டு 'உன் அம்புகளை எனக்குத் தருதல் வேண்டும், என்று காமனை இன்னும் இரந்து கொள்வேன்” என்றும் அவள் சொன்னாள்

"அன்னோ இந்த ஒண்ணுதல்” என்று வருந்திக் கண் கலங்கி அழுதாள். தோள் வாடி மெலிந்து வளையல் கழலப் பெற்றாள் இந்தப் பேதை, மடம் பொருந்திய மெல்லிய நடையையுடைய அன்னப்பறவை விரைந்து செல்ல, அதைச் சேர்ந்த அன்னச் சேவலின் கூட்டம் போல, பின் அவள் காதலன் வந்தான்். வர, அங்கே அவனைக் கண்டு தான்் பட்ட துயரம் எல்லாம் மறந்தாள் மறந்து இம் மங்கை பின்பு ஊரவர் நகைத்த நகையையும் போக்கிப் போன நாணமும் தன் உடலிடத்தே வந்து நிற்கையிலே தலைவணங்கித் தன் உடலிடத்தே அழகுண்டான மனத்தில் நகை ஏற்பட அந்த நல்லெழில் மார்பனிடத்தே சேர்ந்தாள் அம் மகிழ்ச்சியையும் எல்லாரும் காணுங்கள்!” எனக் கண்டவர் வியந்து தமக்குள் கூறினர்

339. செய்வினை முடித்து வந்தர் காதலர்!

தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு, வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்்போல், கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர; அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல, மல்லல் நீர்த் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப; இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப; செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை மாலை நீ இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன், அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு? மாலை நீ