பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


சூள்வாய்த்த மனத்தவன் நினைபொய்ப்பின் மற்று அவன் வாள்வாய் நன்று ஆயினும், அஃதுஎறியாது விடாதே காண். ஆங்கு அனைத்து, இனி பெரும! அதன்நிலை; நினைத்துக் காண்: சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த வினை வரு பருவரல் போல, துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.

- கவி 149 வரிசையான திமில்கள் யானைகளாகவும், அலையின் ஒலி முரசமாகவும், இனத்தையும் அழகையும் உடைய கரையைச் சேர்ந்துள்ள பறவைகள் காலாட் படையாகவும் பாண்டியன் பகைவர் மேல் படையெடுத்துச் சென்றதைப் போன்ற வலிமையையுடைய கடலைச் சேர்ந்த நிலத்தை உடையவனே, நான் கூறுவதைக் கேட்பாயாக:

தனக்கு ஒரு வருத்தம் உண்டானவிடத்து உதவினவர் களுக்கு ஒரு வருத்தம் ஏற்பட்டால் உதவி செய்யாதவன், தனக்கு நூல் முதலியவற்றைக் கற்பித்தவன் தன்னிடம் ஒன்றும் பெறாமல் மனம் வருந்த, தனது கைப் பொருளை அக் கல்விப் பொருளுக்குக் கைம்மாறாகக் கொடுத்து உண்ணாதவனாகத் தான்் கற்ற கலையில் தவறு செய்து கொண்டவனின் கல்விப் பொருள் நாள்தோறும் தேய்வதைப் போன்று தான்ே தான்ாகத் தேய்வான் அதுவே அல்லாமல் அந்தச் செய்ந்நன்றி கொல்லலான அது தான்் உடலை ஒழித்து உயிர் சென்றவிடத்தே யாயினும் அனுபவிக்கச் செய்யாமல் போகாது

தான்் சொல்லும் சூளைக் காண்கின்றவர் மனம் கொள்ளும்படி சூள் உரைத்த மனத்தையுடையவன், தான்் சொன்ன சூளை நிறைவேற்றாது, கைவிட்டுப் பொய்ப்பவன் ஆனால், தன்னைச் சேர்ந்து வாழும் உறவினர் நெஞ்சைதான்் ஒன்றை அறியாமல் வருத்துமாறு தன்னிடம் பொருந்திய செல்வத்தில் நின்று மேன்மேலும் வளர்க்கும் முயற்சி இல்லாத வனின் குடியானது நாள்தோறும் தேயும் அதுபோல் தான்ே தான்ாகத் தேய்வன் அதுவுமே அல்லாது பின் அச் சூளைப் பொய்த்த தீவினை மறுமையில் விரவி, அது வாளினது