பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

31


“பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண்காக்கை நீர் அற்ற கழியில் வாழ்கின்ற சிறு மீன்களை நிறைய உண்ணும் துறைவன் முன்பு நம்மைத் தெளிவிக்க வேண்டிச் சூளுற்றுக் கூறிய சொல் திரட்சி பொருந்திய அழகு விளங்கும் வளையைக் கவர்ந்து கொண்டது” என்றுதலைவி தோழியிடம் வருந்திக் கூறினாள்

64. நல்ல நல்லோள் கண்கள்

பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை

வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்

மெல்லம் புலம்பன் தேறி,

நல்ல வாயின நல்லோள் கண்ணே. - ஜங் 166

“பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண்காக்கை வரி பொருந்திய வெண்மையான் பலகறைகளை வலை என எண்ணி அஞ்சும் மெல்லிய கடற்கரைகளையுடைய தலை மகள் சொற்களைத் தெளிந்ததால், என் தலைமகளின் கண்கள் இளமை கொண்டு விளங்கின.

65. நமக்குக் கேள் ஆவான்!

பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை இருங் கழி இனம் கெடிறு ஆரும் துறைவன் நல்குவன் போலக் கூறி, நல்கானாயினும், தொல் கேளன்னே. - ஐங் 167 “பெரிய கடற்கரையில் உள்ள சிறு வெண்காக்கை உப்பங்கழியிடத்தில் வாழும் இனமாகிய கெளிற்று மீன்களை உண்ணும் துறைவன், நமக்குத் தலையளி செய்வதாகக் கூறிப் பின்பு அதைச் செய்யாமல் ஒழிந்தான்். ஆயினும் அவன் நமக்கு முன்பே உறவான தன்மையுடையவன் என்று அறிக” என்று தலைவி தோழிக்கு வருந்தி உரைத்தாள்

66. பாலுண்டு துன்பம் நீங்குவாள்!

பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை துறை படி அம்பி அகமனை ஈனும்