பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

33


தொண்டி நகர் போன்றாள் 69. மீண்டும் பெறுவது அரிது!

திரை இமிழ் இன் இசை அளைஇ, அயலது முழவு இமிழ் இன் இசை மறுகுதொறு இசைக்கும் தொண்டி அன்ன பனைத் தோள், ஒண் தொடி அரிவை - என் நெஞ்சு கொண்டோளே.

- ஐங் 171 "கடல் அலைகள் ஒலிக்கும் இனிய ஒலியுடன் கலந்து அயலதாகிய முழவு முழங்கும் இனிய ஓசை தெருக்கள் தோறும் முழங்கும் தொண்டி அத் தொண்டி நகரத்தைப் போன்ற பருத்த தோள்களையும் ஒளி பொருந்திய வளை யலையும் உடைய பெண்ணான இவள், வன்மையுடைய என் நெஞ்சத்தைக் கவர்ந்து கொண்டாள் ஆதலால் இவளைத் திரும்பவும் கூடிப் புணர்ச்சி பெறுவது அரிது போலும்!” என்று தலைவன் கூறினான்.

70. அலைபோல் இரவிலும் உறங்கேன் ஒண் தொடி அரிவை கொண்டனன், நெஞ்சே! வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல்ஒலித் திரையென இரவினானும் துயில் அறியேனே! - ஐங் 172 “ஒளி பொருந்திய தொடியை அணிந்த அரிவையானவள் என் நெஞ்சைக் கவர்ந்து கொண்டாள்: ஆகலின், வண்டுகள் ஒலிக்கும் குளிர்ந்த துறையையுடைய தொண்டி நகரத்துப் பரந்த கடலில் எழுந்து முழங்கும் அலைகளைப் போல் இரவிலும் உறக்கம் கொள்ளேன் ஆனேன்” எனப் பாங்கன் வினவத் தலைவன் என் தன் துயரைச் சொன்னான்.

71. அறியாமை இருந்தவாறு என்னே! இரவினானும் இன் துயில் அறியாது அரவு உறு துயரம் எய்துப - தொண்டித் தண் நறு நெய்தல் நாறும் பின் இருங் கூந்தல் அணங்குற்றோரே. - ஜங் 173