பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


மிகுந்த நிலையைக் கண்டும் நீ விரும்பி அருள் செய்யாது போயின், இவளுடைய தோளும் கூந்தலும் பாராட்டி வாழும் இவ் வாழ்க்கை எனக்கு இயல்வதோ? இயலாது” எனத் தலைவன் தோழியிடம் சொன்னான்.

77. நெற்றி ஒளி கெடாதிருக்க அருள்வாய்! நல்குமதி, வாழியோ நளி நீர்ச் சேர்ப்பl அலவன் தாக்கத் துறை இறாப்பிறழும் இன் ஒலித் தொண்டி அற்றே, நின் அலது இல்லா இவள் சிறு நுதலே. - ஜங் 179 “மிக்க நீரையுடைய துறையை உடையவனே! நின்னை அன்றியமையாத இவளது சிறிய நெற்றி, கரையில் வாழும் நண்டு தாக்குவதால் துறையில் வாழும் இறால்மீன் புரளும் இனிய ஒலியையுடைய தொண்டி நகர் போன்றதாதலால், நீ இவள் நெற்றி ஒளி கெடாதிருக்க அருள்வாயாக!” என்று தோழி தலைவனிடம் விரைந்து மணம் முடிக்க உரைத்தாள்.

78. மணந்து நலன் துய்க்க! சிறு நனணி வரைந்தனை கொண்மோ - பெருநீர் வலைவர் தந்த கொழுமீன் வல்சிப் பறை தபு முது குருகு இருக்கும் துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே! - ஜங் 180 ‘பரதவர் கடலினின்றும் பிடித்துக்கொணர்ந்த கொழுவிய மீனாகிய உணவின் பொருட்டுப் பறக்கும் வலி இல்லாத முதிர்ந்த குருகு தங்கியிருக்கும் துறை பொருந்திய தொண்டி நகர் போன்ற இவளை மிகக் குறுகிய போதில் மணந்து இவளது நலத்தைத் துய்ப்பாயாக!" எனத் தோழி தலைவனை நோக்கிக் கூறினாள்.

79. அருள் செய்தால் வாழ்தற்கு இனிது நெய்தல் உண்கண் நேர் இறைப் பணைத் தோட் பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்