பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


துறை கெழு கொண்க! நீ தந்த அறைபுனல் வால் வளை நல்லவோ தாமே? - ஐங் 193 “வலம்புரிச் சங்குகள் ஊர்ந்து செல்வதால் உழப்பட்ட நீண்ட மணல் பரந்த கடற்கரையில் கதிர்களையுடைய முத்துகள் இருள் நீங்குமாறு ஒளி விட்டு விளங்கும் துறை யுடைய தலைவ, நீ அளித்த, ஒலிக்கின்ற நீரில் பிறந்த வெண்மையான இவ் வளையல்கள், முன்னம் இவள் அணிந்தி ருந்த வளையல்கள் போலல்லாது மெலிந்தபோது நீங்காத இயல்பு உடையனவோ?’ என்று திருமணத்தை விரைவுபடுத்த வினவினாள் தோழி.

92. ஏற்றது செய்க கடற் கோடு அறுத்த அரம் போழ் அவ் வளை ஒண் தொடி மடவரற் கண்டிகும்; கொண்க! நல் நுதல் இன்று மால் செய்தென, கொன் ஒன்று கடுத்தனள், அன்னையது நிலையே.

- ஜங் 194 தோழி, "கடல் துறைத் தலைவ, கடற்சங்கை அறுத்து அரத்தால் வனைந்து செய்யப்பட்ட அழகிய வளையலை யும் ஒள்ளிய கொடியையும் உடைய மடப்பம் உடைய தலைவியைக் காண்பாயாக. அவளுடைய நல்ல நெற்றி இன்று ஒளிமங்கியுள்ளது இப்படிப்பட்ட வேறுபாட்டினால் இதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் எனத் தாய் நினைத்தாள் அஃது இல்லத்தில் நிகழும் நிலைமையாதலால், நீ நினக்கு ஏற்றதைச் செய்க!” எனத் திருமணத்தை வற் புறுத்திக் கூறினாள்

93. என் உறக்கம் கவர்ந்தாள் வளை படு முத்தம் பரதவர் பகரும் கடல் கெழு கொண்கன் காதல் மடமகள் கெடல் அரும் துயரம் நல்கிப், படல் இன் பாயல் வவ்வியோளே. - ஐங் 195 "சங்கில் பிறக்கும் முத்துகளைக் கொணர்ந்து பரதவர், மற்ற நிலத்தில் வாழ்பவர்க்கு விற்கும் கடல் பொருந்திய