பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


பகையைத் தருகின்ற நட்பைச் செய்யோம்! என்று தலைவி உரைத்தாள்.

146. நீங்கும் துயரம் "மெல்லிய இனிய மேவரு தகுந இவை மொழியாம் நீ எனச் சொல்லினும், அவை, மறத்தியோ வாழி - என் நெஞ்சே - பல உடன் காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் வண்டு வீழ்பு அயரும் கானல் தண்கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?

- அம்மூவன் குறு 306 “என் நெஞ்சே! ஒசையால் மெல்லியனவும் பொருளால் இனியனவும் விரும்பத்தக்கனவும் ஆகிய சொற்களை இனி மொழிய மாட்டோம் என்று நினக்கு நன் சொன்னாலும், அழகிய மா மரத்தினது தாதுகள் பொருந்திய, மலரினிடத்து வண்டுகள் பல ஒருங்கே வீழ்தலைச் செய்யும் சோலையை உடைய குளிர்ச்சி பொருந்திய கடற்கரைத் தலைவனைக் கண்ட பின், நீ நான் கூறியவற்றை மறந்து விடுகின்றாய்” என்றாள் தலைவி தோழியிடம்.

147. உரைப்பாயா என் நிலையை புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும், நம்மே போலும் மம்மர்ந்து ஆகி, எல்லை கழியப் புல்லென்றன்றே; இன்னும் உளெனே - தோழி, இந் நிலை தண்ணிய கமழும் ஞாழல் தண்ணம் துறைவதற்கு உரைக்குநர்ப் பெறினே.

- பெருங்கண்ணனனார் குறு 310 "தோழியே, பறவைகளும் ஒலித்தன; மலர்களும் குவிந்தன; கடற்கரைச் சோலையும் தனிமை மிக உடையதாயிற்று; வானமும் நம்மைப் போன்ற மயக்கத்தை உடையதாகி, பகல் கழிய அதனால் பொலிவிழந்தது. இந்த என் நிலைமையைக் குளிர்ந்த மணம் வீசுகின்ற மலர்கள் நிறைந்த ஞாழல்கள்