பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

73


பிழையா வஞ்சினம் செய்த களவனும் கடவனும் புணைவனும் தான்ே.

- அம்மூவனார் குறுந் 318 "தோழியே, அடைந்தாரை எறிகின்ற சுறாமீன்கள் மிக்கு விளங்கும் கடற்பரப்பினிடத்து, நறிய ஞாழல் பூவோடு புன்னை மலரும் பரவி வெறியாடும் இடத்தைப் போலத் தோற்ற மளிக்கின்ற துறையை உடைய தலைவன், என்னை வரைந்து கொள்ளுதலை மனத்துள் கருதான்் கருதினாலும் அயலார் மணம் வேண்டி வர நேரும் என்பதனை அறியாத அவனுக்கு நான் சொல்லுவேனோ? இப்பொழுது இளைத்த இந்த மூங்கிலை போன்ற அழகுடைய மெல்லிய தோள் களை அனைத்த அந்த நாளிலே நம்மிடத்துப் பிழை யாமையைப் புலப்படுத்தும் சூளுறவுச் செய்த வஞ்ச நெஞ் சுடையவனும் அவ் வஞ்சினத்தை நிறைவேற்றும் கடப்பாடு பெற்றனும் புனை போன்று இருப்பவனும் அத் தலைவனை அன்றிப் பிறர் இல்லை என்று தலைவனுக்கு கேட்கும்படித் தோழிக்குத் தலைவி உரைத்தாள்

152. மணக்க வேண்டும் ஊர் பழி தீர்க்க பெருங் கடல் பரதவர் கொள் மீன் உணங்கலின் இருங்கழிக் கொண்ட இறவின் வாடலொடு, நிலவு நிற வெண் மணல் புலவப், பலஉடன் எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள், நக்கதோர் பழியும் இலமே, போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் புன்னை.அம் சேரி இவ் ஊர் கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.

- தும்பிசேர் கீரனார் குறு 320 "தோழி, பெரிய கடலினிடத்தே பரதவர் கொண்ட மீனினது உலர்ந்த வற்றல், நீந்துவதற்கு அரிய கழியினிடத்தே, அவர் பிடித்து வந்த இறால் மீனின் வாடிய, வற்றலோடு நிலவினது நிறத்தை ஒத்த, வெள்ளிய மணல், புலால் நாறும் படி பல மணல்மேடு தோறும் தங்கிக் கிடக்கும் துறையை உடைய தலைவனோடு, ஒரு நாளேனும் மகிழ்ந்து விளை