பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


யாடிய பழிதான்ும் மலர்ந்த பொன் போன்ற பூங்கொத்து கள் பொருந்திய வண்டுகள் ஒலிக்கின்ற கிளைகளை உடைய புன்னை மரங்கள் நிறைந்த சேரிகளைக் கொண்ட இவ் ஊரில் உள்ளார், தம்பால் உள்ள கொடிய தன்மையினால் வீணே நம் மீது பழி மொழிகளைக் கூறுவர்” என்றாள் தலைவி தோழி தலைவன் கேட்கும் வண்ணம்.

153. வாராதே இரவில்! கொடுங் தாள் முதலைக் கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் கானல்அம் பெருந் துறை, இன மீன் இருங் கழி நீந்தி நீ நின் நயன் உடைமையின் வருதி, இவள் தன் மடன் உடைமையின் உயங்கும்; யான் அது, கவைமக நஞ்சு உண்டாஅங்கு, அஞ்சுவல் - பெருமl - என் நெஞ்சத்தான்ே.

- கவைமகன் குறு 324 “தலைவா!, நினது அன்புடைமையால் வளைந்த கால் களை உடைய கொல்லுதல் வல்ல ஆண் முதலையானது நீர்வழியிடத்துப் பிறர் செல்வதைத் தடுத்து திற்கும் காணலை உடைய பெரிய கடல்துறையின்கண் திரளான மீன்களை உடைய அரிய கழியை நீந்திக் கடந்து வருகிறாய். இத் தலைவியோ தன் அறியாமையினால் வருந்துகின்றாள். யான் என் மனத்தினுள்ளே இரட்டைப் பிள்ளைகள் நஞ்சுண்டால் இருவர் திறத்தும் ஒரு தாய் வருந்துவதைப் போல நீ அங்ங்ணம் வருதலை எண்ணி அஞ்சுவேன்" என்றாள் தோழி தலைவனிடம்.

154. பிரிவைத் தாங்க முடியாது சேறும் சேறும் என்றலின், பண்டைத் தம் மாயச் செலவாச் செத்து, மருங்கு அற்று மன்னிக் கழிக’ என்றேனே அன்னோ! ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? கருங் கால் வெண் குருகு மேயும் பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.

- நன்னாகையார் குறு 325