பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  • அன்பொடு புணர்ந்த ஐந்தினை - நெய்தல்

160. இரவு தங்கிச் செல்க இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடுந் தேர் வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் தங்கிளிர்ஆயின், தவறோ? - தகைய தழை தாழ் அல்குல் புலம்பு அகல - தாழைதைஇய தயங்குதிரைக் கொடுங் கழி இழுமென ஒலிக்கும் ஆங்கண், பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே?

- அண்டர் மகன் குறுவழுதி குறு 345

“தாழை மரங்கள் பொருந்திய, விளங்கிய அலைகளை

உடைய வளைந்த கழியானது "இழும் என்று ஆரவாரம் செய்யும். அவ் இடத்துள்ள பெரிய கடலை வேலியாக

உடைய எமது சிறிய நல்லூரில், பொன் தொங்கல்களால்

அணி செய்யப்பட்ட ஓடுகின்ற கொடிஞ்சியை உடைய

நுமது உயர்ந்த தேரை, மலையை ஒத்த உயர்ந்த மணல் மேட்டிலே நிறுத்தி விட்டு இங்கிருந்து இளைப்பாறி, தழையுடை தாழ்ந்த அல்குலை, உடைய இத் தலைவியின்

தனிமை நீங்கும் வண்ணம் தங்குவீரானால் அது பிழை யாகுமோ?” என்று தலைவனை நோக்கித் தோழி கூறினாள்.

161. ஈந்த நலம் ஈந்ததுதான்் அடும்பு அவிழ் மணிமலர் சிதைஇ மீன் அருந்தி, தடந் தாள் நரை இருக்கும் எக்கர்த் தண்ணம் துறைவன் தொடுத்து, நம் நலம் கொள்வாம் என்றி-தோழி, கொள்வாம்; இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்து அவை தா எனக் கூறலின், இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே?

- சாத்தனார் குறு 349 "தோழி! அடும்பின் கொடியினிடத்தே மலர்ந்த அழகிய

மலரைச் சிதைத்து மீனை உண்ணுகின்ற வளைந்த காலை யுடைய நாரை தங்கியிருக்கின்ற மணல்மேட்டை உடைய குளிர்ந்த துறைக்குத் தலைவனைச் சூழ்ந்து, வளைத்து, நாம்