பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ? 31

குளிர்ச்சியை உடையாள்; பனிக்காலத்தில் அடக்கிக் கொண்ட கதிரவனுடைய கதிர்கள் மறையக் குவிந்து அழகினதாக அசைகின்ற வெயிலை உட் பொதித்த, தாமரை மலரின் உள்ளிடத்தைப் போன்ற சிறிய வெம்மையை உடையாள்" என்று தலைவன் கூறினான்.

165. பலன் இதுதான்ோ! தொல் கவின் தொலைந்து, தோள் நலம் சாய்அய், அல்லல் நெஞ்சமொடு அல்கலும் துஞ்சாது, பசலை ஆகி, விளிவது கொல்லோ - வெண் குருகு நரலும் தண் கமழ் கானல், பூ மலி பொதும்பர் நாள்மலர் மயக்கி, விலங்கு திரை உடைதரும் துறைவனொடு இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே?

- ஆசிரியர் ? குறு 381 “வெள்ளை நாரைகள் ஒலிக்கின்ற குளிர்ந்த மனம் வீசுகின்ற கடற்கரையிலே, உள்ள மலர் நிறைந்த சோலை யிலுள்ள செவ்விய மலர்களைக் கலக்கச் செய்து குறுக்கிடும் அலைகள் உடைந்து சிதறும் துறைகளை உடைய தலைவ னோடு, விளக்கமுற்றுக் கானும் பற்கள் வெளிப்படச் சிரித்து மகிழ்ந்ததனால் உண்டான பயன் பழைய அழகு அழியத் தோளினது நலம் மெலியத் துன்பத்தை உடைய நெஞ் சோடு இரவுதோறும் துரங்காமல் பசலை உண்டாக நாம் அழிவதுவோ?’ என்று தலைவியை நோக்கித் தோழி வினவினாள்.

166. மாலை தரும் துயரம்!

வெண் மணல் விரிந்த வீததை கானல் தண்ணந்துறைவன் தணவா ஊங்கே, வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும் மாலையோ அறிவேன் மனனே, மாலை நிலம் பரந்தன்ன புன்கணொடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.

- வெள்ளிவீதியார் குறு 386