பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

93


தெண் திரை மணிப்புறம் தைவரும் கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே

- சேந்தங் கண்ணனார் நற் 54 “கரிய கால்களையுடைய வெண்மையான குருகே! வளைந்த நீர்ப் பரப்பில் மேய்ந்து உன் இனத்தோடு சேர்ந்து தாவிப் பறத்தலை விரும்பினை ஆயினும் மிக்க புலால் அருந்தும் தூய்மையான சிறகையுடைய உன் இனத்தோடு சிறிது நேரம் தங்கியிருந்து எனது செய்தியைக் கேட்பாயாக சிறிய புல்லிய மாலைக் காலம் எனக்குப் பெரிய வருத்தம் செய்தது. அதை நீ அறிந்தால் அன்பு கொள்வாய். அன் பில்லாத நெஞ்சம் கொள்ளாது என் குறையை இத் தன்மைய தென்று உரைப்பாயாக தழை உடுப்பவர் கொய்யும் குழை அரும்பிய இளைய ஞாழல் மரத்தையும் தெளிந்த கடலலை தடவிவரும் கரிய புறத்தையுடைய கண்டல் மரத்தையும் வேலியாகவுடைய கடல் துறையை உடையோற்கு உணர உரைப்பாயாக!” என்று தன் வேட்கையைத் தலைவி நாரை யிடம் கூறி அமைதியுற்றாள்.

180. தலைவன் குதிரைகள் துன்புறும்! பெரு முது செல்வர் பொன்னுடைப் புதல்வர் சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக், கோல் கொண்டு அலைப்பப் படிஇயர் மாதோவீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசு முதல் கொளிஇய மாலை விளக்கின் வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்பக், கையற வந்த பொழுதோடு மெய் சோர்ந்து, அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை நீடு நீர்ப்பணித்துறைச் சேர்ப்பன் ஒடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே

- முதுகூற்றனார் நற் 58 “மிகுந்த வழிவழிச் செல்வமுடையோரின் பொன்னணி கள் பூண்ட புதல்வர்கள் சிறிய தோளிலே கோக்கப்பட்ட செவ்விதாக ஒலிக்கும் பறையிலே எழுதிய குருவி அடிபடுதல்