பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் 等 103

நல மென் பணைத் தோள் எய்தினம் ஆகலின், பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி, நிழல் காண்தோறும் நெடிய வைகி, மணல் காண்தோறும் வண்டல் தைஇ, வருந்தாது ஏகுமதி - வால் எயிற்றோயே! மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் நறுந் தண் பொழில, கானம்; குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ 9 “வெண்மையான பற்களையுடையவளே, நிலைத்த நற் செயல்களை முயன்று செய்து முடிக்கும் ஆர்வமுள்ள மக்கள் தாம் வழிபடும் தெய்வத்தைக் கண்ணெதிரே கண்டது போல என் மனச் சுழற்சித் துன்பம் நீங்க உனது அழகிய மெல்லிய பருத்த தோள்களை அடைந்து விட்டேன் ஆகையால் பொரி போன்ற பூக்களையுடைய புன்க மரத்தின் அழல் போன்ற ஒள்ளிய தளிர்களை உன் தேமல் படர்ந்த அழகிய கொங்கை களில் அழகு உண்டாகும்படி பூசிக் கொள்க நிழலைக் காணும்தோறும் நீண்ட நேரம் நின்று தங்கி வருக. மணலைக் காணும் தோறும் சிற்றில் இழைத்து வண்டல் விளையாட்டு விளையாடி வருக இவ்வாறு செயற்பட்டு வருந்தாது என் னோடு வருக மாமரத்தின் அரும்புகளைக் கோதி மகிழும் குயில்கள், அவை கூவும் நறிய குளிர்ந்த பொழில்களை யுடைய கானகத்தில் யாம் இருவரும் செல்வோம் அவ் வழியில் சிறிய ஊர்கள் பல உள” எனத் தலைவன் தன்னுடன் வரும் தலைவியிடம் பேசி அழைத்துச் சென்றான்.

195. கை விட்டு விடாதே இவளை அண்ணாந்து ஏந்திய வன முல்ை தளரினும், பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும், நீத்தல் ஒம்புமதி - பூக் கேழ் ஊர! இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணிஇயர்,