பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 105

தாழியில் மத்திட்டுத் தயிர் கடைய எதிரே நட்டுள்ள தூணில் தேய்வு காணப்படும். வெண்ணெய் தெரியும் இயக்கத்தின் போது முழக்கம் கேட்கும். இது வைகறைப் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் விடியற்காலையிலாகும். இந்த நேரத்தில் தலைவனொடு உடன் போக்கில் செல்ல விரும்பிய தலைவி தன்னைப் பிறர் பார்த்து விடாதபடி மறைத்துத் தன் காலில் அணிந்திருந்த பரலொடு சேர்ந்த சிலம்பைக் கழற்றிப் பல மாட்சிமைப்பட்ட வரிகள் செய்த பந்தொடு சேர்ந்து வீட்டின் ஒரிடத்தில் வைத்து வரச் சென்றவள் நினைத்து விட்டாள். நான் பிரிந்தால் இவை இரண்டினையும் என் ஆயத்தார் காணும் தோறும் என்னை நினைத்து வருந்துவர். அவர் இரக்கப்படத் தகுந்தவர். அவர் வருந்தும்படியான செயல் என்னால் செய்ய முடியாது என்று தீர்மானித்தாள். அவள் கண்கள் கண்ணிர் விட்டன. ஆதலால் தலைவ, உன்னோடு உடன்வர அவள் விரும்பியும் தன் அளவில் நில்லாமல் ஆயத்தார் வருத்தத்தை நினைத்து அவள் கண்கள் கலங்கின,” என்றாள் தோழி உடன்போக்குணர்த்திய தலைவனிடம்.

197. நீடு வாழ்வாராக அவர்! தொல் கவின் தொலைய, தோள் நலம் சாஅய, நல்கார் நீத்தனர் ஆயினும், நல்குவர்; நட்டனர் வாழி - தோழி, - குட்டுவன் அகப்பா அழிய நூறி, செம்பியன் பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது அலர் எழச் சென்றனர் ஆயினும் - மலர் கவிழ்ந்து மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல், இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டெனத், துஞ்சாத் துயரத்து அஞ்சுபிடிப் பூசல் நெடு வரை விடரகத்து இயம்பும் கடு மான் புல்லிய காடு இறந்தோரே. - மாமுலனார் நற் 14 "தோழி, என் பழைய அழகு தொலையவும் என் தோள் நலம் கெடவும் இப்போது அருள்செய்யாது என் தலைவர் கைவிட்டாரெனினும், அவர் அருள் செய்வார் என்பது