பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் 辜 1st

நிறைந்தவள்’ என்று அல்லலுற்றாள் மகட்போக்கிய தலைவி யின் தாய்.

204. நீர் சுரந்த ஏரார் விழிகள்

'படு சுடர் அடைந்த பகுவாய் நெடு வரை முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலைப், புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து, கல்லுடைப் படுவில் கலுழி தந்து, நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில் துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர் அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை, இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல் வல்லுவம் கொல்லோ, மெல்லியல், நாம்? என விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, நல் அக வன முலைக் கரை சேர்பு மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.

- இளவேட்டனார் நற் 33

"தலைவனே, மறையும் ஞாயிறு சேர்ந்த பிளந்த வாயை யுடைய உயர்ந்த மலையில் மேட்டு நிலத்திலுள்ள சிறிய குடியிலே பரந்த மாலை நேரத்தில் தனிமை சேர்ந்திருக்கும் பொலிவிழந்த மன்றத்திலே கல்லையுடைய மடுவிலே ஊறிய கலங்கள் நீரைக் கொண்டு வந்து தந்து நிறைந்த மழையை அறியாத குறைந்த உணவையுடைய இரவு நேரத்தில், துவர் நிறம் செய்த ஆடையையும் செவ்விய அம்புத் தொடையையு முடைய வழிப்பறி செய்வோர் வழி பார்த்துத் தங்கியிருக்கும் அச்சம் தோன்றும் பாதையில் அவர் செல்ல எண்ணுவா ரென்றால் நாம் மறுத்தல் செய்ய முடிந்தவர்களாய் உள் ளோமா? மெல்லியல் சொல் என்று கேட்டாள் அப்போது விம்முற்ற சொல்லையுடையவளாய் என் முகத்தைப் பார்த்த போது அவளது மலர்போன்ற கண்களிலிருந்து நல்ல மார்பிலுள்ள அழகிய கொங்கையின் முகட்டில் விழுந்து பரக்கும்படி நிறைந்த கண்ணிர் பரந்தன." என்றுரைத்தாள் தோழி, பிரிவு மேற்கொண்ட தலைவனிடம்