பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 113

நெடுஞ் சேண் சென்று வருந்துவர்மாதோ - எல்லி வந்த நல் இசை விருந்திற்கு, கிளா இழை அரிவை, நெய் துழந்து அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றிச், சிறு நுண் பல் வியர் பொறித்த குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே.

- இளந்தேவனார் நற் 41 “விளங்கும் அணிகலன் அணிந்த அரிவையே, இரவில் வந்த நல்ல புகழுடைய விருந்தினருக்கு நெய் கலந்து சமைத்த கொழுப்புடைய ஊனின் நறுமணப் புகை உறைந்த உன் நெற்றியில் சிறிய நுண்ணிய பல வியர்வைத் துளிகள் அழுந்தி யிருக்கும குறுநடையுடைய தலைவியாகிய உன் கூட்டத்தை வேண்டுவார் தலைவர். பசிய கண்ணயுடைய யானையின் பருத்த கால் உதைத்த வெள்ளை நிறமான புறத்திலுள்ள களர்நிலம் விடுகின்ற புழுதியில் தோய்ந்து, காட்டின் முதலில் வருந்திய வருத்தம் மெல்ல மெல்லப் பாறையிலுள்ள சிறிய கிணற்றின் நீரால் தணியும்படியாக நெடுந்துாரம் சென்று அவர் வருந்துவர். அவ்வாறு வருந்துவது பின்னர் இனிய இல்லறம் நடத்தவே யாம்' என்று அமைதி கூறினாள் தோழி 207. நீ செல்லின் நெஞ்சுடைவாள் துகில் விரித்தன்ன வெயில்அவிர் உருப்பின் என்றுழ் நீடிய குன்றத்துக் கவாஅன். ஒய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் வெம்மை ஆர் இடை இறந்தல் நுமக்கே மெய்ம்மலி உவகை ஆகின்றது. இவட்கே, அஞ்சல் என்ற இறை கைவிட்டெனப், பைங் கண் யானை வேந்து புறந்து இறுத்தலின், களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் ஓர் எயின் மன்னன் போல, அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே.

- எயினந்தையார் நற் 43