பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் :

கண் களி பெறுஉம் கவின் பெறு காலை, எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லர் உlஇச் சென்ற நெஞ்சம் செய் வினைக்கு அசாவா, ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும் கொல்லோ? அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து, தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி, 'ஏதிலாட்டி இவள் எனப் போயின்று கொல்லோ,நோய் தலை மணந்தே?

- பெருவழுதி நற் 56 "தோழி, குறுகிய நிலைமையிலுள்ள குராமரத்தின் சிறிய குளிர்ந்த கமழும் அரும்புகள் வண்டுகளால் மலர்ந்து உண்டாகும் நறுமணம் காற்றோடு கலந்துள்ள அது மனத்திற் கும் கண்ணிற்கும் இனிமையாக இருக்கும். அந்த அழகிய நேரத்தில் ஒளி பொருந்திய என் காதலர்க்கு யான் படும் துன்பத்தை அறிவுறுத்துவதற்காக அவர் சென்றிருக்கும் நாட்டிற்கு என் நெஞ்சம் சென்றது. அங்கே காதலர் செய்யும் தொழிலுக்குத் துணையாக இருந்து ஊக்கமூட்டி வினையை முடித்து அவரையும் அழைத்துக் கொண்டு ஒன்றாகத் திரும்பி வரலாமென்ற விருப்பத்தோடு உடனிருந்து வருந்து கின்றதோ? காதலர் அருள் செய்யாததால் வருந்தி இங்கே விட்ட என் பசலை நிறத்தைப் பார்த்து என்னை அடை யாளம் தெரியாமல் இவள் ஏதிலாட்டி இவள் யாரோ அயலாள் என்று துன்பம் கலந்த நிலையோடு போய் விட்டதோ? யாதும் அறியேன்” என்று தலைவி மெலி வடைந்து உரைத்தாள்.

212. அந்தத் திங்கள் வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை கந்து பிணி யானை அயா உயிர்த்ததன்ன என்றுழ் நீடிய வேய் பயில்அழுவத்துக், குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைத்து, உள்ளினென் அல்லெனோ, யானே - முள் எயிற்று, திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், எமதும் உண்டு, ஒர் மதிநாட் திங்கள்,