பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

நின் பிரிவுக்கு உடன் படாது தடுத்தற்கும் உரியவள்; எனவே, இவள் நின் பிரிவை ஆற்றாது வருந்த நீ பிரிந்து செல்லாது இருந்தால் நன்று” என்று.இயம்பினாள்.

3. உடன் அழைத்துப் போவாய்!

புதுக் கலத்தஅன்ன கனிய ஆலம்

போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ் சுரம்

தண்ணிய இனிய ஆக;

எம்மொடும் சென்மோ, விடலை! நீயே. - ஐங் 303

தோழி தலைவனை நோக்கி, "தலைவனே புதிய மண் கலத்தைப் போன்ற நிறம் பொருந்திய பழங்களையுடைய ஆலமரம் தன்னை அடைந்த பறவையினம் தன்னிடமிருந்து செல்லாமல் தடுக்கும் வேனிலின் வெம்மையுடைய அரிய காடுகள் குளிர்ச்சியையும் இனிமையையும் உடையனவாய் ஆக நீ எம்மையும் உடன் அன்ழைத்துக் கொண்டு போவா யாக” என்று உரைத்தாள்

4. இவளைப் பிரிந்து செல்லற்க!

கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய ஆன்நீர்ப் பத்தல் யானை வவ்வும் கல்லதர்க் கவலை செல்லின், மெல் இயல் புயல் நெடும்கூந்தல் புலம்பும், வய மான் தோன்றல் வல்லாதீமே. - ஐங் 304 தோழி தலைவனை நோக்கி, "வலிமைமிக் குதிரையை யுடைய தலைவனே கல்வி இல்லாத கோவலர்கள் தம் கைக் கோலால் தோண்டிய நீர் நிறைந்த பள்ளத்தை யானைகள் கவரும் கற்கள் பொருந்திய கவர்த்த வழியில் நீசென்றால், மென்மையான தன்மையுடைய இவள் வருந்துவrள் இவள் அழ நீ செல்லவதை தவிர்வாய்” என்றாள்

5. செலவு என்ன பயனைத் தரும்?

களிறு பிடி தழிஇப் பிற புலம் படராது, பசி தின வருந்தும் பைது அறு குன்றத்துச்,