பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப

உலவை ஆகிய மரத்த

கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே?

- இளங்கீரனார் நற் 62

"வேர்கள் பின்னிக் கொண்ட மூங்கில்களிலே காற்றுத் தாக்கும் போது எழும் ஒலி, கட்டுத்தறியிலே கட்டிய யானை வருந்தி நெட்டுயிர்ப்பது போல் இருக்கும். அவ்வாறாய கோடைக்காலத்தில் நீடிய மூங்கில் நெருங்கிய காட்டு வழி யில் செல்லும்போது குன்றை ஊர்ந்து செல்லும் திங்களைப் பார்த்து, அந் நிலையிலேயே நின்று காதலியை நினைந்து யான் வருந்தினேன் அல்லனோ? முள்போன்ற பற்களையும் திலகம் பொருந்திய மணம் கமழும் அழகிய நெற்றிய்ையு முடைய நிறைமதியான திங்கள் ஒன்று எமக்கு உரிமை யானதும் உள்ளது அது முழங்கும் குரலையுடைய வெவ்விய காற்று வீச, நிழல்கெடச் சாய்ந்த கிளைகளையுடைய மரங் களைக் கொண்ட கற்கள் விளங்கும் உயர்ந்த மலையின் அப்பால் உள்ள ஊரில் உள்ளது என்று யான் நினைத்தேன் அல்லனோ?” என்று தலைவன் தன்னுள் மீண்டும் எண்ணினான்

213. எப்படிச் செல்லப் போகிறாளோ?

மிளகு பெய்தனைய சுவைய புன் காய் உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட புலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன் பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகிப், புன் புறா உயவும் வெந் துகள் இயவின், நயந்த காதலற் புணர்ந்தனள்ஆயினும், சிவந்து ஒளி மழுங்கி அமர்ந்தன கொல்லொ - கோதை மயங்கினும், குறுந் தொடி நெகிழினும், காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும், மாண் நலம் கையறக் கலுழும் என் மாயக் குறுமகள் மலர் ஏர் கண்னே?

- இனிசந்த நாகனார் நற் 66