பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 * அன்பொடு புணர்ந்த ஐந்தினை - பாலை

மணல் ஆடு கழங்கின், அறைமிசைத் தாஅம் ஏர் தரல் உற்ற இயக்கு அருங் கவலைப் பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ? என்று நாம் கூறிக் காமம் செப்புதும், செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று - அம்ம வாழி, தோழி, - & யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே?

- கண்ணகனார் நற் 79 "தோழி, வாழி கேள் அன்று தோன்றிய ஈங்கையின் தேன்துளி மூடியிருக்கும் மிகத் திரண்ட மொட்டுகள், கூரை வேய்ந்த நல்ல மனையில் குறிய வளையல்களை அணிந்த மகளிர் மணலில் விளையாடுவதற்கு இட்ட கழற்சிக் காய்கள் போலக் கற்பாறையின் மேல் பரந்து கிடந்து அழகு தரும் மக்கள் வெல்லுதற்குரிய கவர்ந்த வழியிலே, பிரிந்தோர் இப் பருவத்து வந்து கூடியிருக்கவும், எம்மைக் கூடியிருந்த நீர் இப்போது பிரிந்து போதலைப் பற்றிக் கருதுதுலின் அரிய கொடுமை வேறுண்டோ? என்று நாம் கூறி நம் காதலைச் சொல்லுவோம் சொல்லாது விடின் அவர் பிரிந்து போய் என் உயிருக்குத் தீங்கு வந்தாலும் வரும் ஆதலால், காதலர் பிரிந்து செல்வதை எவ்வாறு தடுப்போம்? கூறுக” என்று தலைவனின் பிரிவை உணர்ந்து வேறுபட்ட தலைவி தோழி யிடம் வினவினாள் -

218. எங்ங்னம் தனித்திருப்பேன் கண்ணும், தோளும், தண் நறுங் கதுப்பும், திதலை அல்குலும், பல பாராட்டி, நெருநலும் இவனர்மன்னே! இன்றே, பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர் மரன் இல் நீள் இடை மான் நசையுறுஉம், சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன உவர் எழு களரி ஒமை அம் காட்டு, வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அருளு சுரம்