பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 11

சுடர்த் தொடிக் குறுமகள் இணைய, எனைப்பயம் செய்யுமோ - விடலை நின் செலவே.?

- ஐங் 305

தோழி, "தலைவ, ஆண் யானை தன் பெண் யானையைத் தழுவி, வேனில் வெப்பம் தெறுதலால் உணவொன்றும் பெறலாகாமையால், அது பெறக்கூடிய வேறு புலங்களை நினைத்துச் செல்லுதலும் செய்யாது, பசிநோய் வருத்த வருந்தி வாடும் பசுமையில்லாத மலைக்கு, ஒளிவிடும் வளை அணிந்த இளையவளாகிய இவள் நின் பிரிவைப் பொறுக்க இயலாது அழுது புலம்ப, இவளை நீங்கிச் செல்லும் நின் செலவு என்ன பயனைச் செய்யும்?” என்று தனித்துச் செல்லும் தலைவனிடம் வினவினாள்.

6. புல்லாங்குழல் போல் புலம்புவாள் வெல்போர்க் குரிசில் நீ வியன் சுரன் இறப்பின், பல் காழ் அல்குல் அவ் வரி வாடக், குலினும் இணைகுவள் பெரிதே - விழவு ஒலி கூந்தல் மாஅயோளே. - ஐங் 306 தோழி, ‘வெல்லும் போரை உடைய தலைவனான நீ அகன்ற பாலையைக் கடந்து சென்றதால் பல மணிகள் பொருந்திய மேகலை அணிந்த அல்குலிடத்து அழகிய வரிகள் வாட்டம் அடைய நினது பிரிவாற்றாமையால் மன விழாவைப் போல நல்ல மணம் கமழும் கூந்தலையும் மாமை நிறத்தையும் கொண்ட இவள் வேய்ங்குழல் ஒலிப்பதைப் போன்று பெரிதும் அழுவாள்” என்று அவள் பிரி விாற்றா மையைக் கூறினாள்

7. பொருள் நன்றில்லை! ஞெலி கழை முழங்குஅழல் வயமா வெரூஉம் குன்றுடை அருஞ் சுரம் செலவு அயர்ந்தனையே, நன்றுஇல கொண்க நின் பொருளே - பாவை அன்ன நின் துணைப் பிரிந்து வருமே. - ஐங் 307 தோழி, “கொண்கனே! மூங்கிலால் கடையப்பட்ட கழை யில் எழுந்து முழங்கும் தீயை, வன்மையுடைய புலிகள்