பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 129

பெற்றுக் கொடுத்த தந்தையின் மிகுந்த செல்வத்தை நினை யாதவளாய், ஒடும் நீரிலே கிடக்கும் துண்ணிய மணல் போல ஒருபொழுது மறுத்து மறுபொழுது உண்ணும் உறுதிப்பாடு உடையவள் ஆயினளே அச் சிறுபெண். இது வியப்பாய் உள்ளது” என்று மனைமாட்சி கண்டுவந்த நற்றாய் கூறினாள்

226.கண் முன்னே தோன்றுகின்றன:

உழை இண்ந்து உண்ட இறை வாங்கு உயர் சினைப் புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங்காய் கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் பெருங்கள்டு இறந்தும்,எய்த வந்தனவால்அருஞ்செயல் பொருட் பிணி முன்னி, யாமே சேறும்; மடந்தை என்றலின், தான் தன் நெய்தல் உண்கண் பைதல் கூரப், பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து, உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும் ஆம்பில்அம் குழலின் எங்கிக், கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே

- இளங்கீரனார் நற் 113 “மங்கை, அருஞ்செயல் செய்து தேடும் பொருள் என் உள்ளத்தைப் பிணித்தது அதனை நினைந்து யான் செல் கின்றேன் என்று சொல்லியவுடன் அவள் தான் தனது நெய் தல் மலர் போன்ற மையுண்ட கண்கள் துன்பங் கொண்டன வாய்ப் பெரிதும் வருந்தி பின்னிய கரிய கூந்தலால் முகத்தை மறைத்தாள் உதியஞ்சேரல் நெருங்கித் தாக்கிய ஆரவாரத்தின் இடமாகிய போரில் இம் என்று ஒலிக்கும் பெரிய போர்க் களத்திலே இன்னிசையார் ஊதும் ஆம்பலின் அழகிய குழல் போல ஏங்கி அழுதாள் மனம் கலங்குகின்ற வருத்தமடைந்த வளாகிய'தலைவியின் துன்பமடைந்த பார்வைகள் என்னைத் தொடர்ந்து வந்தன. ஆண் மான் அண்ணாந்து தழை தின்ற தால் உயர்ந்து வாங்கிய மேலான கிளைகளையும் புல்லிய அடிமரத்தையும் உடைய இலந்தை மரத்தின் கொத்துகளில் வெளிப்புறமுள்ள பசிய காய்கள் மலை சேர்ந்த சிறு நெறியில்