பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

உதிந்து நிறையப் பரவிக் கிடக்கும் அப் பெரிய காட்டைக் கடந்தும் அப் பார்வைகள் பொருந்த வந்தன. இது என்ன வியப்பு” என்று தலைவியின் துயரங்களை நினைவு கூர்ந்து உரைத்தான், இடைச்சுரத்தில் தலைவன்.

227. வேதனை கொள்ளும் நெஞ்சம் அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில், சேவலொடு கெழீஇய செங் கண் இருங் குயில் புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும், அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என இணர் உறுபு, உடைவதன்தலையும் புணர்வினை ஒவ மாக்கள் ஒள் அரங்கு ஊட்டிய துகிலிகை அன்ன, துய்த் தலைப் பாதிரி வால் இதழ் அலரி வண்டு பட ஏந்திப், புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோம், என் நெஞ்சே!

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற் 118 “ஆற்றங்கரைப் பக்கமுள்ள மா மரத்தின் அசையும் கிளைகள் விளங்கியிருந்தன. தளிர்கள் அழகு எய்தியிருந்தன. குளிர்ந்த நறுமணமுள்ள சோலையிலே சிவந்த கண்களை யுடைய கரிய பெண் குயில்கள் ஆண் குயில்களோடு விரும்பி உட்கார்ந்து கொண்டு ஒன்றையொன்று எதிர்எதிர் விரும்பிக் கூவின பூக்கள் மலிந்திருக்கும் இளவேனில் காலத்திலும் அகன்று சென்றனர் நம்மை உறுதியாக மறந்தார் என நினைத்த நாம் வருந்திக் கொண்டிருக்கிறோம். அதன் மேலும் தம் தொழிலில் வல்லமையுள்ள ஒவியர்கள் ஒள்ளிய அரக்கைத் தோய்த்த எழுதுகோல் போல மெல்லிய பகுதி கொண்ட பாதிரிப் பூ இருக்கும். வெள்ளையான இதழ்களை யுடைய அம் மலர்களை வண்டுகள் மொய்க்கும் அப் புது மலர்களை வட்டிலில் ஏந்திக் க்ொண்டு தெருவு தோறும் வந்து விற்பனை செய்யும் பூ விலை மடந்தையர் கூவுவதைக் கேட்டு என் நெஞ்சம் பெரிதும் விருந்தும்,” என்று பருவம் கண்டு ஆற்றாது தலைவி வருந்தி உரைத்திாள்