பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

“யான் வருத்தி மெலிவேனாக புதிதாகக் கொண்டு வந்த மணல் பரப்பிய அழகிய இல்லத்தின் முற்றத்தில் ஒரை விளையாடும் தோழியர் கூட்டத்தையும், விளையாடும் இடத்திலுள்ள நொச்சி வேலியையும் காணுந்தோறும் விரைந்து கண்ணிர் ஒழுகும் கண்ணோடு அழுகின்றேன் அவள் வளர்த்த கிளிகளும் என்னைவிட மிகக் கூடிக் கத்து கின்றன உறவு முறைசொல்லி அவளை விளித்துக் கூவு கின்றன என் இளமகள் குற்றமில்லாதவள் அம்பல் மிகுந்த இந்த மூதூரில் அலர் தூற்றும் வாயுடைய பெண்டிர் கூடி இன்னா இன் உரை கூறக் கேட்ட பின் சில நாள் வரை யிலாவது ஒன்றும் அறியேன் போல் இருந்திருக்க வேண்டும் அவ்வாறு இருக்கத் தவறினேன். “உன் கூந்தலின் நறுமணம் கமழ்கின்றதே" என்று கேட்டு விட்டேன்” என்றாள் தலை வியைப் பெற்ற அன்னை

232. வெற்றியுடன் வரட்டும் அவர்! வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும், 'நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம் தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே, நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை, செங் கால் மராஅத்து அம்புடைப் பொருந்தி, வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது, கல் அளைச் செறிந்த வள் உகிர்க் பிணவின் இன் புனிற்று இடும்பை தீரச் சினம் சிறந்து, செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம்பாயும். அருஞ் சுரம் இறப்ப என்ப;. வருந்தேன் - தோழி - வாய்க்க, அவர் செலவே

- கள்ளம்பாளனார் நற் 148 "தோழி, உன் அழகை நோக்கியும் இனிய சொல் கூறி யும் நீ அங்கு வருதல் ஆற்றாய் என்று சொல்லித் தாம் தொடங்கிய ஆள் வினைக்குப் பிரிந்தார் தலைவர் இன்று, நெடிய ப்ொய்கை பொருந்தியிருந்தும் நீரில்லாத நீண்ட வழியில் சிவந்த அடியையுட்ைய மரா மரத்தின் அழகிய