பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

வெங் கடற்று அடை முதல் படு முடை தழிஇ, உறுபசிக் குறு நரி குறுகல் செல்லாது மாறு புறக்கொடுக்கும் அத்தம், ஊறு இலராகுதல் உள்ளாமாறே. - ஆசிரியர்?.நற் 164 “மழைபெய்யாது கைவிட்டிருந்த காட்டில் ஞாயிறு தனது செங்கதிர்களைப் பாய்ச்சி வருத்துதலினாலே மண் வெடித்தது உலக உயிர்கள் மிகவும் வருந்தித் துன்புற்றன அவ்வாறாய முது வேனிற். காலத்தில் தலைவர் காட்டு வழி யில் சென்றார் ஆயினும் அவர் நன்று ஒன்றிற்குச் சென்றனர் என்பதால் நன்று ஒன்றைச் செய்தார் என்று சொல்லி உன்னைத் தெளிவடையும் படிசெய்தேன்; அப்போதும் நீ தெளிவடையவில்லை ஏனென்றால், செம்மையான கோல் போன்ற அம்புக்ளையும் விளைந்த வில்லையுமுடையவர் வழிப்பறி செய்வோர் அவர் வழியிற் செல்லும் புதிய மக்களின் உயிரைப் பறிப்பர் வெவ்விய காட்டில் ஒன்று சேர்ந்த பிணங்களை இலைகளால் மூடி வைப்பர் முடைநாற்றம் வீசும் அவற்றை மிக்க பசியையுடைய சிறுநரியும் நெருங்கா மற் வேறு வழியில் செல்லும் இக் காட்டு வழியில் தலைவர் செல்லும் போது எவ்வித இடையூறும் இல்லாதவராய் ஆக வேண்டும் என நாம் உள்ளவில்லையல்லவா?” என்று பொருள் தேடச் செல்லும் தலைவன் குறித்த காலத்தில் மகிழ்விக்க வந்தார் என்று தோழி உரைத்தாள்

237. எதற்கோ பிரிவு?

பொன்னும் மணியும் போலும், யாழ நின் நன்னர் மேனியும் நாறு இருங் கதுப்பும், போதும் பணையும் போலும் யாழ நின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும்; இவை காண்தோறும் அகம் மலிந்து, யானும் அறம்நிலை ப்ெற்றோர்.அனையேன், அதன்தலை, பொலந்தொடிப்புதல்வனும் பொய்தல் கற்றனன்; வினையும் வேறு புலத்து இலேனே நினையின், யாதனின் பிரிகோ? மடந்தை! காதல் தானும் கடலினும் பெரிதே' - ஆசிரியர் ? நற் 166