பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 139

“மடந்தையே, உன் நல்ல மேனி பொன் போன்றது உன் மணம் கமழும் கரிய கூந்தல் நீலமணி போன்றது உன் அழகிய ம்ையுண் கண்கள் குவளை மலர்கள் போன்றன இவற்றின் அழகைக் காணும் போதெல்லாம் உள்ளம் மகிழ்ந்து யர்னும் அறவழியில் நிலைபெற்றோர் அடைந்த பயன்களையுடையேன் போலே இருக்கிறேன் அதற்கு மேலும் பொன் அணிபூண்ட புதல்வனும் விளையாடக் கற்றுக் கொண்டான் இப்போது வெளியிடத்தில் எனக்கு வேலை யில்லை காதல் கடலினும் பெரியதாய் உள்ளது. இவை யாவற்றையும் சிந்தித்துப் பார்த்தால் என்ன காரணத்திற்காக யான் பிரிய வ்ேண்டும்” என்று பொருள் தேடப் புறப்பட்ட தலைவன், தலைவி வேறுபட அமைதிபடக் கூறினான்.

238. எவ்வாறு துணிவாள் இவள்?

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி சேரிஅம் பெண்டிர் நெஞ்சத்து எறிய ஊர் ஆன்கன்றொடு புகுதும் நாடன் பன் மலை அருஞ் க்ரம் இறப்பின், நம் விட்டு, யாங்கு வல்லுநl மற்றே - ஞாங்கர் வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பாண்ாள், ஆர்வ நெஞ்சமொடு அளைஇ, மார்பு உறப்படுத்தல் மரீஇயகண்ணே?

- ஆசிரியர் ? நற்.171 “நீர் ஆசைக்கு முயன்ற வருத்தத்தையுடைய பெண் யானை வேனிற் காலத்தில் குன்றத்தின் வெப்பமான மலையடி வாரத்திலுள்ள நிலத்தில் செல்லும் அதனோடு செல்ல முடியாத மெல்லிய தலையையுடைய யானைக் கன்று நின்று விடும் சேரியில் வாழும் அழகிய பெண்டிர் நெஞ்சத்தில் அச்சம் உண்டாகும்படி ஊரிலுள்ள பசுவின் கன்றுகளோடு செல்ல முடியாது யானைக் கன்று புகும் அவ்வாறாய மலை நாடன் நம்மைக் கைவிட்டுப் பல மலைகளுள்ள கடத்தற்கரிய