பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 .ே அன்பொடு புணர்நத ஐந்திணை - பாலை

தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி, நெருநலும் அனையள் மன்னே; இன்றே, மை அணற் காளை பொய் புகலாக, அருஞ் சுரம் இறந்தனள் என்ப - தன் முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே.

- ஆசிரியர் ? நற் 179

"இல்லத்தில் வளர்ந்தெழுந்த வயலைக் கொடியைக் கன்று என்ற பசு தின்றதைப் பார்த்தாள், செய்யும் கடமை களை அறிந்த என் இளைய மகள், கையிலிருந்த பந்தை நிலத்தில் எறிந்து விட்டாள் விளையாடும் பாவையையும் கைவிட்டு விட்டாள் தன் அழகிய வயிற்றில் அடித்துக் கொண்டு வருந்தினாள் மான் மாறுபட்டுப் பார்ப்பது போன்ற மயங்கிய நோக்கத்தோடு அடிக்கடி வருந்தினாள் யானும் அவள் தாயும் தேனொடு கலந்த இனிய பாலை ஊட்ட உண்ணாமல் விம்மி அழுதாள் நேற்றுவரை அப்படி இருந்தாள் அது கழிந்தது இன்று கறுத்த தாடியையுடைய காளை ஒருவனின் பொய்கையில் பற்றுக்கோடாகக் கொண்டு அரிய பாலை வழியில் சென்றாள் என்று சொல்கிறார்களே: மயிற்பீலியின் அடிப்பாகம் போன்ற அழகுடைய தன் வெண்மையான பற்கள் தோன்றப் புன்முறுவல் பூத்து அந்தப் பாவை வழியில் அவனோடு போயினாள் என்று கூறுவர் யான் எவ்வாறு ஆற்றுவேன்” என்றாள் தலைவி தன் தலை வனுடன் உடன் போக்குணர்ந்ததை ஆற்றாளாய தாய்

242. நாரை மிதித்த நெய்தல் மலர்!

ஒரு மகள் உடையேன்மன்னே,அவளும் செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள், இனியே, தாங்கு நின் அவலம் என்றிர்; அது மற்று யாங்யனம் ஒல்லுமோ? அறிவுடையீரே! உள்ளின் உள்ளம் வேமே, உண்கண் மணி வாழ் பாவை நடைகற் றன்ன என்