பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : . 153

தோழி தலைவிக்கு உணர்த்த அது கேட்ட தலைவி நொந்துரைத்தாள்

254. முற்றிலும் எதையும் அழிக்க மாட்டார் மரம் சாம் மருந்தும் கொள்ளார் மாந்தர்; உரம் சாச் செய்யார், உயர்தவம், வளம் கெடப் பொன்னும் கொள்ளார், மன்னர் - நன்னுதல் நாம் தம் உண்மையின் உளமே அதனால் தாம் செய்பொருள் அளவு அறியார் தாம் கசிந்து, என்றுழ் நிறுப்ப, நீள் இடை ஒழிய, சென்றோர்மன்ற நம் காதலர்; என்றும் இன்ன நிலைமைத்து என்ப; என்னோரும் அறிய அவ் உலகத்தானே.

- கன்னியன் பூங்குன்றனார் நற் 226 “தன்னுதாலாளே மக்கள், மரம்பட்டுப் போகும்படி அதன் மருந்து முழுவதையும் பறித்துக் கொள்ளமாட்டார்; வலிமை முழுவதும் கெடும்படி உயர் தவத்தைச் செய்ய மாட்டார் மன்னர், தம் குடிமக்கள் வளம் கெடும்படி பொன் வரி வாங்கமாட்டார் அவ்வாறிருந்தும் நம் காதலர் தாம் வருந்த மேற்கொண்டு வெயில் நிலை பெற்றிருப்ப, நீண்ட சுரத்தில் யாம் இங்கே ஒழியச் சென்றனர் அவர் இருப்ப தால் நாம் இருக்கிறோம் அல்லை எனில் இறப்போம் அவர், தாம் செய்யும் பொருளின் அளவு அறியார் ஆடவர் இயற்கை என்றைக்கும் இவ்வாறான நிலைமையுடையது என்பர் சான் றோர் இவ் உலகத்தில் இதனை எல்லோரும் அறிவர்” என்று பொருள் தேடச் சென்ற தலைவன் பிரிவுக்கு வருந்த தோழி அமைதிப்படுத்த அதற்கு இவ்வாறு விடை தந்தாள் தலைவி

255. ஆராய்ந்து செய்க சேறும், சேறும் என்றலின், பல புலந்து, 'சென்மின் என்றல் யான் அஞ்சுவலே; 'செல்லாதீம் எனச் செப்பின், பல்லோர் நிறந்து எறி புன் சொலின் திறந்து அஞ்சுவலே;