பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

யுடைய மன்றத்தைக் கொண்ட விழா நடக்கும் பழைய வெற்றி யுடைய மூதூரில் என் மகளின் விளையாட்டுத் தோழியரைப் பார்க்கும் போதெல்லாம் யான் நடுங்கித் துன்புறுவேன் எம் இல்லத்திலிருந்த அழகிய கூந்தலையுடைய என் மகளைத் தன் மொழியால் தன் வயப்படுத்தி உடன் கொண்டு போனவன் காளை போன்ற இளைஞன் வன் கண்மையுடைய அவனை ஈன்ற தாய் என்னைப்போல நடுங்கி வருந்துவாளாக” என்று களவு ஒழுக்கத்தில் தலைவியை அழைத்துச் சென்ற தாயும் தன்னைப்போல் நொந்து வருந்தி உரைத்தாள்

275. என்னவாக முடியுமோ?

என் ஆவது கொல்? தோழி, - மன்னர் வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த பொன் செய் ஒடைப் புனை நலம் கடுப்பப், புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடிஇணர் ஏ கல் மீமிசை மேதக மலரும், பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும், வினையே நினைந்த உள்ளமொடு துணைஇச் செல்ப என்ப காதலர்: ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே.

- குதிரைத் தறியனார் நிற் 296

"தோழியே, மன்னரின் தொழில் வினையில் வல்ல யானையின் புள்ளியை யுடைய முகத்திலே அணிந்த பொன்னால் செய்ய்பேட்ட் முகபடாம் போலத் துளையை யுடைய காய்கள் காய்க்கும் கொன்றையின் கிளையினிடத்தே கொடிபோல் பூத்திருக்கும் பூங் கெர்த்துகள் உயர்ந்த பாறை யின் மேலே மேன்மையாக மலர்ந்திருப்பதைப் பார் இக் காலம் பிரிந்தவர் இரங்கும் கார் காலம் பெறுதற்குரிய இக் க்ாலத்தில் காதலர் தன் வினையையே நினைந்த உள்ளத் தோடு விரைவாகச் செல்வார். நாம் வருந்தும் துன்பத்தை உழந்து காவோம் இனி ஆவது என்ன இருக்கிறது?’ என்று வருந்தினாள் தோழியிடம் தலைவி