பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் ே 175

கோடைப் பருவத்திலும் நடுங்குபவள் குளிர்ந்த புதரிலுள்ள ஈங்கையின் அழகிய தளிர் தடவத் தன் சிறகு குவிந்திருந்த வருத்தமிக்க வெண்மையான குருகைப் பார்வை விலங்குள்ள வேட்டுவன், அதன் கட்டை அவிழ்த்துவிட மாரிக் காலம் நின்ற மயக்கமுள்ள முன் பனிப் பருவத்திலும் வாடைக் காற்றோடு கலந்து வீசும் பெரிய பின் பனிப் பருவத்திலும் தனியாக இருந்து என்ன பாடு படுவாளோ என்று யான் வருந்துகிறேன்” என்று வினையின் பொருட்டு பிரியும் தலைவன் கோடையிலிலேயே நடுங்கும் தலைவி மற்ற பரு வங்களில் எவ்வாறுள்ளாளோ என்று தன் நெஞ்சிற்குக் கூறினான் t

281. வாழ்க நீடுழி 'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்; வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை; மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில், குறும் பொறிக் கொண்ட கொம்மை அம்புகர்ப்பின் கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக் கழிவதாக, கங்குல்' என்று தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய - நொடி விடுவன்ன காய் விடு கள்ளி அலங்கல் அம் பாவை ஏறிப், புலம்பு கொள் புன் புறா வீழ்பெடைப் பயிரும் என்றுழ் நீளிடைச் சென்றிசினோரே!

- முப்பேர் நாகனார் நற் 314 "முதிர்ந்தோர் இளமையை மீண்டும் அடைய மாட்டர்; வாழ்நாளின் வகையையும் அளவையும் அறிந்த- அறிஞரு மில்லை ஆகவே மாரிக் காலத்தில் மலரும் பிச்சிப்'பூவின் குளிர்ந்த இதழ்களையுடைய பூமாலையும் மணக்கும் வயிர முள்ள சந்தனத்தின் தேய்வையையும் அணிந்த மார்பிலே, கச்சணிந்த, இளைய அழகிய, கரிய கண்கள் அம்ைந்த விருப்பமிகு கொங்கைகள் அழுத்தும்படி தழுவிக் கங்குல் கழிவதாக” என்று கூறினார் தலைவர் அவ்ர் தம் மொழியை