பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

வன்மையான நெஞ்சுடைமையான் பொய்த்தனர் எனினும் யாதொரு தீதின்றி அவர் வாழ்க நொடி விடுவது போலக் காய்களை விடும் கள்ளியின் அசையும் பாவை போன்ற கிளைகளில் ஏறித், தனிமை கொண்ட புல்லிய புறாவானது தான் விரும்பும் பெடையை அழைக்கும் வெயில் மாறாத நீண்ட வழியில் அவர் சென்றார்” என்றாள் தலைவி தன் நெஞ்சுடன் பேசியவளாய்

282. பிடியானையின் புலம்பல்

நினைத்தலும் நினைதிரோ - ஐய! அன்று நாம் பணைத் தாள் ஒமைப் படு சினைபயந்த பொருந்தாப் புகர் நிழல் இரந்தணெமாக, நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி, ஒடித்துமிசைக் கொண்ட ஒங்கு மருப்பு யானை பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர் ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து, என்றுழ் விடர் அகம் சிலம்ப, புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற் 318

‘ஐயனே! அன்றொரு நாள் நாம் பருத்த அடிப்பர்கத்தை யுடைய ஒமை மரத்தின் தாழ்ந்த கிளை தந்த பொருந்தாத புள்ளியுள்ள நிழலின் கீழ் தங்கியிருந்தபோது நாம் இருந்த இடத்திற்கு ஆண், பெண் யானைகள் இரண்டும் நமக்கு அச்சமூட்டாது அங்கு வந்தன வந்து தழையை ஒடித்துத் தின்றன. உயர்ந்த மருப்பையுடைய யானை புள்ளிகளை யுடைய தன் நீண்ட துதிக்கையைச் சுருட்டித் தூக்கி வேறொரு வழியாகப் போகத் தொடங்கியது அந்த அள விற்குத் தன் துணை விலகியதைக் கண்டதும் அதையே பிரிவு என்று வேறுபட உணர்ந்த புல்லிய தலையையுடைய பெண் யானை வெயிலடிக்கும் மலைப்பிளப்புகள் எல்லாம் எதிரொலிக்குமாறு புலம்பிய குரலை நீர் நினைத்தலும் செய்கின்றீரோ?” என்றாள் தோழி, பிரிவு உணர்த்தப்பட்ட தலைவனை நோக்கி