பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன் : 181

தலைவி வினவலும் உண்டாகும்” என்றாள் ஆற்றாது தன்னுள்ளே சொல்லிக் கொண்ட தோழி

288. மாலைப் பொழுதைக் கண்டும் வாராரோ?

முல்லை த்ாய கல் அதர்ச் சிறு நெறி அடையாது இருந்த அம் குடிச் சீறுர்த் தாது எரு மறுகின், ஆ புறம் தீண்டும் நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து, உகு பலி அருந்திய தொகுவிரற் காக்கை புன்கண் அந்திக் கிளைவயின் செறியப், படையொடு வந்த பையுள் மாலை இல்லைகொல் வாழி - தோழி - நத்துறந்து அரும் பொருட் கூட்டம் வேண்டிப் பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே?

- கருவூர் கதப்பிள்ளை சாத்தனார் நற் 343 "தோழியே, வாழி ஆக்க்ள் முல்லைக் கொடி படர்ந்த மலையின் வழியாகிய சிறிய நெறியை அடையாது, அழகிய குடிகள் வாழும் சிறுாரில் பூக்களின் தாதுகள் எருவாக உதிர்ந் திருக்கும் தெருவில் செல்லும் அந்த ஆக்களின் முதுகிலே கடவுள் உறையும் ஆலமரம் விட்ட நெடிய விழுது தீண்டும் அங்குப் போடப்பட்ட பலிச் சோற்றைத் தொக்க விரல்களை யுடைய காக்கைகள் தின்னும் துன்பந் தரும் அந்தி நேரத்தில் தம் சுற்றத்திடம் சேரும் பிரிந்தாரை வருத்தும் தென்றல், குழலிசை என்னும் படையோடு வந்த துன்பந்தரும் மாலை நம்மைத் துறந்து அரிய பொருளைச் சேர்க்க விரும்பிப் பிரிந்துறையும் நம் காதலர் சென்ற நாட்டில் இல்லையோ? இருக்குமானால் அவர் திரும்பியிருப்பார்” என்றாள் தலைவி

289. தழுவ விரும்பினால் போதும் குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளித் தண் கார் தலைஇய நிலம் தணி காலை, அரசு பகை நுவலும் அரு முனை இயவின், அழிந்த வேலி அம் குடிச் சீறார். ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்டத்