பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை, இன்று, நக்கனைமன் போலா - என்றும் நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் பெருந் தண் கொல்லிச் சிறுபசுங் குளவிக் கடி பதம் கமழும் கூந்தல் மட மா அரிவை தட மென் தோளே.

- எயினந்தை மகன் இளங்கீரனார் நற் 346 “நெஞ்சே, கிழக்குக் கடலில் நீரை முகந்து மேற்குத் திக்கில் சென்று இருளித் தண்ணிய முகில் மழை பெய்து விட்டது நிலம் குளிர்ந்த காலை, அரசர்கள் பகையினால் அழிந்தது என்று சொல்லப்படும் அரிய முனையின் வழியில் அழிந்த வேலியுடைய, அழகிய குடிகளிருந்த சீறுாரில் ஆள் இல்லாத மன்றத்தில் மெல்லெனக் காற்று வீசியது. முயற்சி வலிமையாகிய தறுகண்மையுடைய இருக்கையில் இப்போது இருப்பது போல் கருதுகிறாய் என்றும், நிறைவுற்ற மதி போல விளங்கும் பொறையனுடைய பெரிய குளிர்ந்த கொல்லி மலையின் சிறிய மலைப்பச்சை சூடிய மணம் செவ்வியதாகக் கமழும் கூந்தலை யுடைய இளைய அழகிய பெண்ணின் பெரிய மெல்லிய தோள்களை நினைத்து இப்போது மகிழ்ந்தாய் அத் தோள்கள் இங்கு அடைய முடியாதன” என்று பொருள் தேடப் புகுநத தலைவன் ஆற்றாது தன் நெஞ்சிற்குக் கூறினான்

290. எவ்விதம் வந்தாளோ?

இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய அன்பு இல் ஆடவர்அலைத்தலின், பலருடன் வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை, அழல் போல் செவிய சேவல் ஆட்டி, நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்று, தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து, பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ அருஞ் சுரக் கவலை வருதலின் வருந்திய நமக்கும் அரிய ஆயின, அமைத் தோள்