பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை . த. கோவேந்தன் : 183

மாண்புடைக் குறுமகள் நீங்கி, யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!

- மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் நற் 352

"இலை வடிவ மாட்சிமைப்பட்ட அம்பை வில்லிலே மாண்புற இருத்தி, உயிர்களிடத்து அன்பில்லாத மறவர் செல்வர் அதனாலே பலருடன் புதியவர் இறந்து கிடப்பர் அஞ்சத்தக்க அந்தக் கவர்ந்த வழியில், அழல் போன்ற சிவந்த செவியையுடைய கழுகுச் சேவல்கள் பிணங்களைத் தின்ன வரும் அப்போது அவற்றை விரட்டி அலைத்து ஊனைத் தின்ன விரும்பும் முதிய நரி தன் நிழலொடு விளையாடும் பசிய ஊனை மிகுதியாகத் தின்ற நரி நீர் வேட்கையுற்றுப் கானல் நீர் விளங்கும் வற்றிய புலத்தில் அலையும் நீரை விரும்பிக் கற் குவியலின் நிழலிலே ஒதுங்கி இருக்க இடம் பெறாது வருந்தும் அவ்வாறான செல்லுதற்கரிய பலவாய வழிகளில் நாம் வந்தனாலே வருந்திய நமக்கும் அவ்வழியில் கண் மூடி விழித்தவுடன் நம் காதலி காணப்படுகிறாள் அவ் வழியில் மூங்கில் போன்ற தோளையுடைய மாண்புடைய இளமடந்தை இல்லம் நீங்கி யாங்கு வந்தனள் இரங்கத் தகுந்தவள்” என்று தலைவன் பாலை வழியிலே ஆற்றானாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டான்

291. விளையாடி மகிழ்க நீ

வினை அமை பாவையின் இயலி, நுந்தை மனை வரை இறந்து வந்தனை; ஆயின், தலை நாட்கு எதிரிய தண்பத எழிலி அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த கடுஞ் செம் மூதாய் கண்டும் கொண்டும், நீ விளையாடுக சிறிதே யானே, மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி, அமர் வரின் அஞ்சேன், பெயர்க்குவென்; நூமர் வரின் மறைகுவென் மாஅயோளே!

- மதுரை மருதன் இளநாகனார் நற் 362