பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை த. கோவேந்தன் : 187

அழகு நாள்தோறும் சிதையவும் பிரிந்தவர் தலைவர் மாலை யணிந்த தன் தொழிலைத் திருந்தக் கல்லாத பாலை நில வீரர்கள் வில்லிலிருந்து தப்பிய பொருந்தாத சிவந்த அம்பு எய்வதை நீங்கிய நெருங்க முடியாத கவர்ந்த வழிகளை யுடைய கடத்தற்கரிய சுரத்தைக் கடந்த காதலர் இப்போது திரும்பி வருவர் நீ வருந்தாதே" என்று தோழி பருவம் காட்டித் தலைவிக்கு ஆறுதல் சொன்னாள்

295. பிரிந்து போகவே மாட்டார்

ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே - புலிப் பொறி அன்ன புள்ளிஅம் பொதும்பின் பனிப்பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர்த் தலைக் காரான் அகற்றிய தண்ணடை ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும், பொன் படு கொண்கான நன்னன் நல் நாட்டு ஏழிற்குன்றம் பெறினும் பொருள்வயின் யாரோ பிரிகிற்பவரே - குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன, நின் R பேர் அமர் மழைக் கண்தெண் பணி கொளவே.

- பாலை பாடிய பெருங்கடுங்கோ நற் 391 “மடத்தையே, நீர் ஒழுகும் ஒளி பொருந்திய குவளை மலர்போன்ற உனது பெரிய அமர்ந்த குளிர்ந்த கண்க ளிலிருந்து நீர் ஒழுக நீ அழாதே அவர் செல்வதைத் தவிர்ப் பார் உன்னை விட்டுப் பிரிய மாட்டார் சிறுத்தைப் புலியின் உடலில் இருக்கும் புள்ளிகள் போலப் புள்ளிகள் அமைந்தி ருக்கும்படி சோலையில் படர்ந்திருக்கும் குளிர்ந்த கொடி களை மேய்ந்த மிகப்பெரிய கொம்பையும் பரந்த தலையை யும் உடைய எருமை கழித்துப் போட்ட மலைப் பச்சையை ஒள்ளிய வளையல் அணிந்த பெண்கள் தமது பொன் அணி கலன்களோடு அணிவர் அவ்வாறான வளப்பம் மிக்க பொன் உள்ள கொண்கானம் என்பதிலுள்ள நன்னனது நல்ல நாட்டிலுள்ள எழிற் குன்றத்தைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற் படினும் பொருள் கொண்டு வருவதற்காகத் தலைவர் உன்னை விட்டுப் பிரியமாட்டார்” என்று பிரிவு உணர்த்தப்